பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போகிறது. நிபுணர்களின் கவாக்குப்படி, அதனுள் ஆண்டு தோறும் தொழில்துறை ஆலைகளால். எழுபது லட்சம் கனமீட்டர் அளவுக்குக் கழிவு நீர் கலக்கப்பட்டு வருகிறது, இதனால் அஜோவ் நீர்நிலைக்கு மிகவும் உண்மையான அச்சுறுத்தலே தோன்றி யுள்ளது-அதன் மீன் வள இருப்புக்கள் அடுத்த சில ஆண்டுகளில் முற்றிலும் குறைத்த போய் விடும். முன்னாட்களில் அங்கு பிடிக் கப்பட்ட மதிப்புமிக்க மீன்களின் அளவு மட்டுமே ஆண்டொன் றுக்கு 150,000 டன் களுக்கும் அதிகமாக இருந்தது: இப்போதோ அந்த அளவு 15,000 டன்களை, அதாவது பத்தில் ஒரு பகுதியை எட்டிப் பிடிப்பதே அரிதாக இருக்கிறது. . தொழிற்சாலைகளின் கழிவு நீரை டான் நதியில் கலப்பது , டான் நதி நீரைத் திசிம் லியான்ஸ்காயா அணையின் மூலம் தடுத்து முறைப்படுத்துவது, இத்தனைக்கும் சிகரம் வைத்தாற் போல் சோவியத் யூனியனது மீன்பிடித் தொழில் துறை அமைச்சர் தோழர் இஷ்கோவின் தொலை நோக்கற்ற நிர்வாகம் ஆகியவை அஜோவ் நீர் நிலையைப் பெரு நாசத்தின் விளிம்புக்கு ஏற்கெனவே கொண்டு வந்து விட்டன. லித்தரத்துர்ணமா கெஜத் . தாவிலும், காம்சொமால்ஸ்காயா பிரால்தாவிலும் வெளியிடப்பட்ட சட்ட பூர்வமான தாக்குதல்களுக்கெல்லாம் பதிலளிக்காமல் நெடுங்காலமாக மௌனம் சாதித்து வந்த தோழர் இஷ்கோவ், இறுதியில் “அஜோ வ் கடல்: இன்றும் நாளையும் என்ற தெளிவு தரமுடியாத ஒரு கட்டுரையினால் பதிலளித்தார். தோழர் இஷ் கோவ். - அஜோவ் கடலை இன்று அவர் நிர்வகித்து வரும் அதே முறையிலேயே தொடர்ந்து நிர்வகித்து வருவாரானால், அஜோவ் கடலுக்கு எந்தவிதமான நாளை' 'யும் இருக்கவே முடியாது. அவரது அனுமதியின் பேரில்தான் ஏறத்தாழ இருநூறு கப்பல்கள் அங்கு கோடைப் பருவத்தில் இரண்டே மாதங்கள் நீங்கலாக, மற்றப்படி ஆண்டு முழுவதிலுமே புல்ஹெட் வகை மீன்களையும் சார்டெல் வகை மீன்களையும் மும்முரமாகப் பிடித்து வருகின்றன. மேலும் அவரது உத்திரவுகளின்படியே, அங்கு எந்திரமயமாக்கப்பட்ட மீன்வலைகள் மட்டுமே, ஆண்டொன்றில் ஒரு கோடிக்கு மேற்பட்ட பைக் பெர்ச்' சிறுமீன் வகைகளை அழித்து வருகின்றன; இதன் மூலம் அஜோவ் நீர்நிலைப் பகுதி யிலுள்ள மீன் "சினை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்புத் தொழில் நிறுவனங்களின் முயற்சிகளையெல்லாம் நாசமாக்கி வருகின்றன. , தமக்கு ஆதரவாக , மீன் பிடிப்பு மற்றும் ஆராய்ச்சி ஸ்தாபனங்களது மாநாட்டை மேற்கோள் காட்டும், தோழர் இஷ்கோவ், இப்போதும் கூட ஒவ்வோர் ஆண்டிலும் நாற்பது அல்லது ஐம்பதாயிரம் டன்னுக்குக் குறையாத அளவுக்கு 357'