பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிகவும் அத்தியாவசியமானது என்பதும் சொல்லாமலே புரியும். பிரபல எழுத்தாளர்கள் இளம் எழுத்தாளர்கள் ஆகிய இருசாராரு மே விமர்சிக்கப்பட வேண்டும், ஆயினும், எல்லோரும் அறிந்துள்ளது போல், விமர்சனமும் வேறுபடுகிறது என்பதும் உண்மைதான். முக்தார் அயூஜோவ் தமது உரையின்போது, நீங்கள் பார்மீது அக்கறை காட்டுகிறீர் களோ, யாரைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களோ அவர்களையே விமர்சிக்கிறீர்கள் என்று மிகவும் சரியாகவே கூறினார். இத்தகைய நட்புறவான விமர்சனம் பற்றிய ஓர் உதாரணத்தை, கஜாக்ஸ்தானின் தலையாய எழுத்தாளர்கள் சமர்ப்பித்த அறிக்கைகளில் காணலாம், அவர்களது தீர்ப்பில் ஒர ள வுக்குக் கடுமையான தன்மை உள்ளது எனில், தமது தோழர்களின் இலக்கிய வருங்காலத்தின் மீது அவர்கள் காட்டும் அக்கறையே அதற்குக் காரணமாகும், லித்தரத்துர்னவா கெஜத்தாவில் வெளியிடப்பட்ட, சபித் முகானோல் சம்பந்தமாக - ஜார்ஜி முன்பிலித் எழுதிய கட்டுரையோ, மிகவும் வேறுபட்டதொரு விஷயமாகும். இதனைப் போன்ற எள்ளி நகையாடி ஏளனப்படுத்தும் விமர்சனத்தை, ஒரு தோழரின் நூலிலுள்ள தவறுகளைத் திருத்த, அவருக்கு உதவும் விருப்பமாக எவரும் கருதுவது சாத்தியம் அல்ல. இந்தக் கட்டுரை எழுத்தாளருக்கு உதவு வதை நோக்கமாகக் கொண் டிருக்கவில்லை; மாறாக, அவரை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. - ஓர் எழுத்தாளர் சித்தாந்த ரீதியில் சீர்கெட்டுப்போன ஒரு புத்தகத்தை வேண்டுமென்றே எழுதினால், ஏதாவதொரு சால்ஜாப்பின் பேரில், மக்களுக்கும் கட்சிக்கும் அரசியல் ரீதியில் தீங்கு பயக்கும் கருத்துக்களைப் பிரசாரம் செய்ய முனை வாரானால், அழிக்கும் நோக்கங் கொண்ட விமர்சனத்தை எழுதுவதை நான் முழுமன தோடு ஆதரிக்கிறேன். இது விஷயத்தில் வார்த்தைகளைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை; மாறாக, பேனாவை ஒரு மரண ஆயுதமாகவே பயன்::டுத்தலாம். - ஆனால் நமது எழுத்தாளர்களில் ஒருவர் தமது படைப்பில் தோல்வியடைந்து விட்டால், அவருக்கு நட்புறவான உதவியைத் தான் வழங்க வேண்டும்; வருங்காலத்திலும் அவர் அதே தவறுகளைப் புரியாத விதத்தில், அவர் எங்கு தவறிழைத்து விட்டார் என்பதை அவருக்குச் சுட்டிக் காட்டியாக வேண்டும், தமது தோழர்கள் பலரது அபிப்பிராயத்துக்குச் செவி சாய்ப்பது' தமது கெளரவத்துக்கு அடுக்காது என்று அவர் கர்வம் கொண் டிருப்பாரேயானால், அவர் கூட்டு உதவியை ஏற்றுக்கொண்டு