பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டி வெறித்து வட்டர்,

  • நிரந்தரமான மதிப்புக்களைப் படைத்தளித்து வரும் இளம்

நாட்டுப்புறக் கவிஞர்கள் மாஸ்கோவுக்கோ, அல்லது பிற பெரிய நகரங்கள் எதற்குமோ வருவதற்குத் தடையேதும் இல்லை, கூட்டத் தைச் சமாளித்து தடுத்து நிறுத்த, தவிர்க்கொணாத விதத்தில் குதிரைப் படை, போலீஸ் ஒருபுறத்தில் வந்து நிற்கவும், கலாரசிகர் களாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் இளம் பெண்-விசிறிகள் முகஸ்துதியான தமது பாராட்டை வெறிபிடித்தாற்போல் கூச்ச லிட்டு வெ ளியிடவும், டமாஸ்கோவில் தமது இலக்கிய மாலை நிகழ்ச் சிகளில், நமது நாகரிகமான பள்ளியறைக் கவிஞர்கள் வெற்றிகர மாகக் காட்சியளிப்பதைப்பற்றி அவர் களும் கேள்விப்படுகிறார்கள். மிகமிக இறுக்கமாகக் குறுகிய கால்சராய்களையும், அளவுக்கு மீறிய விதத்தில் பெரிதாகவுள்ள ஸ்வெட்டர்களையும் அணிந்திருக்கும் இந்த யுவதிகளின் வெறித்தனமான பாராட்டுக்குத் தாமும் உள்ளாக வேண்டும் என்று நாட்டுப்புற இளம் கவிஞர்களும் விரும்புகின்றனர். அவர்களும் புகழ் என்னும் இனிய கனியின் சுவையை ருசித்துப் பார்க்க விரும்புகின்றனர். எனவே மெக்கா வுக்குப் புனித யாத்திரையை மேற்கொள்ளும் உண்மையான மார்க்க விசுவாசிகளின் பேரார்வத்தோடு, அவர்களும் மாஸ் கோவுக்கு வெள்ளம் போல் வந்து சேர்கிறார்கள். எந்தவிதமான புத்திபோதனைகளோ அல்லது தடுப்புக் காவல்களோ அவர்களைத் தடுத்து நிறுத்தி விடாது. அவர்கள் யுக்தியாலோ குயுக்தியாலோ எப்படியேனும் மாஸ்கோவுக்கு வந்து சேர்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். உதாரணமாக ஃபெதினுக்கோ, லியானாவுக்கோ, மாக்சிம் ரைல் ஸ்கிக்கோ அல்லது எனக்கோ, வீ தியில் ஓர் இளம் பெண் எங்களைச் சுட்டிக் காட்டி, தன்னோடுள்ள யாரோ ஒருவரிடம்,

  • அதோ பாருங்கள்; பாருங்களேன்! அவர்தான் இன்னார்!

என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினால், எங்களுக்கு ஃடினத்தில் என்ன உணர்ச்சி ஏற்படும்? எங்களுக்கு இதிலெல்லாம் இனியும் எந்த உத்ஸாகமும் ஏற்படப் போவதில்லை. மாறாக, இத்தனை மட்டும் மரியாதையின்றி எங்களது பெயர் குறிப்பிடப்படுவதைக் கேட்கும்போது, நாங்கள் மனம் புழுங்கி உடம்பை நெளித்துக் கொள்ளத்தான் செய்வோம். ஆனால் ஓர் இளம் எழுத்தாளருக்கோ இது மகிழ்ச்சியூட்டும் முகஸ்துதியாகவே ஒலிக்கும்; இளம் எழுத் தாளர்கள் சிலர் இதனைக் கேட்டு உணர்ச்சிப் பரவசத்தால் அப்படியே முகம் சி வ. ந் து ம் போய் விடுவார்கள். நாம் இளைஞர்களுக்கு இளக்காரம் காட்ட வேண்டிய அவசியமில்லை; என்றாலும் நாம் அவர்களைப் புரிந்து கொள்ள முயலத்தான் வேண்டும்.