பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சம்பந்தப்பட்ட விஷயங்களில் உருப்படியான யோசனை g70 ஆம் கூற முடியும்? தார்மிகப் பிரச்சினைகள் என்று வந்தாலும் கூட, தன்னடக்கம் மிக்க வர்களாகத் தோற்றும் இந்தப் பண்ணை மக்களில் சிலர், எழுத்தாளர்கள் சிலரையும் கடி!.. மிகவும் எளிதாக முறியடித்து வென்று விடுவார்கள், வசந்தகாலப் பயிருக்கும்) மாரிக்காலப் பயிருக்கும் வித்தியாசம் தெரியாத, ஓட்ஸ் தாளி யத்துக்கும் பார்லி அரிசிக்கும் வேற்றுமையைக் கண்டு கூறத் தெரியாத ஒரு நூல: சிரியர், அழையாத ஆலோசகரின் பாத்திரத்தைத் - தாம் ஏற்றுக் கொள்ள , விருப்பப்படாமல் இருப்பதே நல்லது; மேலும், விவேகசூன்யத்தின் விளைவாக, அஃர். ஆலோசனை கூறத்தான் வேண்டும் என்று தமது புத்தியில் தீர்மானிப்பாரானால், நிலைமைகள் சுமுகமாக இருக்கும்போதே, அவர் தலை பிழைத்தால் போதும் என்று விரைவில் தப்பித்து ஓடி . வந்து விடுவதே மேலாகும். எனது பேச்சு சற்று மன வருத்தம் தருவதாக உள்ளது என்பதை நானே உணர்கிறேன்; என்றாலும், நேர்மையாகச் சொன் னால், அவ்வாறு பேசாதிருக்க என்னால் முடியவில்லை! பயங் கரமான பேராசை என்னைப் பிடுங்கித் தின்கிறது; நான் நல்ல புத்தகங்களை அதிகமாக விரும்புகிறேன்; ஆனால் அவையோ மிக மிகக் குறைவாகவே உள்ளன. இது என் மீதும் பிறர்மீதும் என்னைக்கோபம் கொள்ளச் செய்கிறது. எனினும் இதனால் என்ன பயன்? இந்தப் பிரச்சினைகளைக் கூட்டாகவும், அத்தனை அவசரப் படாமலும்தான் தீர்த்தாக வேண்டும், இது போன்ற விஷயத்தில் அவசரம் காட்டுவதால் பயனேதும் விளைந்துவிடப் போவதில்லை. இது மற்றொரு தொல்லை. மேலும் தொல்லைகள் தனியாக வருவதில்லை என்பதையும் நீங்கள் அறிவீர் கள். உக்ரேன் கம்யூனிஸ்டுக் கட்சியின் மத்தியக் கமிட்டிச் செயலாளர் தோழர் பொத்கோர்னி தமது மிகவும் நல்ல சுவை மிக்க உரையின்போது, நான் மிகவும் நல்ல வாய்ப்பு என்று நினைத்திருந்த ஒரு விஷயத்தை கூறத் தவறி விட்டார்: கீவில் மட்டும்தான் உக்ரேனிய எழுத்தாளர்கள் இந்தக் காங் கிரசுக்குப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதல்ல என்பதை அவர் ஏன் சொல்லியிருக்கக் கூடாது? அவர் இவ்வாறே கூறியிருக்கலாம்: அன்பார்ந்த எழுத்தாளத் தோழர்களான நீங்கள் உக்ரேனின் பிராந்தியக் கேந்திரங்களிலிருந்து சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சியின் இந்தக் காங்கிரசுக்குப் பிரதி நிதி களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறீர்கள் என்பதைக் காணும்போது, நீங்கள் ஏன் அங்கேயே உங்கள் வீட்டை அமைத்துக் கொள்ளக் கூடாது, அங்கேயே நல்ல ஆரோக்கியத்தோடும் மகிழ்ச்சியோடும் வசித்து வந்து, உங்களுக்கு வாக்களித்த அந்த வட்டாரத்து