பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்வதை மேலும் எளிதாக்கவே நாங்கள் விரும்பினோம், என்றாலும் ஷோலகோவ் தமது ஒரே பேச்சின் போக்கின்போது, மனித நடவடிக்கையின் மிகவும் நானாவிதமான துறைகள் சம்பந்தப்பட்ட ஏராளமான பிரச்சினைகளை அடிக்கடி தொட்டுக் காட்டியே செல்கிறார். ஒரு கட்டுரை பல பொதுவான பிரச்சினை களோடு தொடங்கி, இளைஞர்களுக்கு நேர்முகமாகக் கூறும் ஒரு செய்தியோடு முடிவுறவும் கூடும். லெனின் பரிசு வழங்கும் விழாவின்போதும், 22வது கட்சிக் காங்கிரசிலும், சோவியத் எழுத்தாளர்களின் 4-வது காங்கிரசிலும், கூட்டுப் பண்ணை விவசாயிகளின் 3-வது அகில-யூனியன் காங்கிரசிலும் ஷோலகோவ் ஆற்றிய சொற்பொழிவுகள் மூன்றாவது பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. ஏனெனில் இந்த உரைகள் ஒவ்வொன்றிலும் ஒரு முக்கியமான பகுதி, இளம் மக்களையும், அவர்களது கல்வி யையும், நாட்டுக்கும் வரலாற்றுக்கும் அவர்கள் ஆற்ற வேண்டிய கடமையையும் பற்றியதாக உள்ளது; ஏனென்றால், அவர்கள் தான் எங்களது சோவியத் அரசின் வருங்காலம் ஆவர். ஒய், லுகின்