பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குதிரை மீது ஏறி வந்த ஒரு மனிதர் ரோட்டுப் பாதையில் தோன்றினார். அவர் எங்கள் காருக்கு வழிவிடுவதற்காக ரை தானிய வயலுக்குள் திரும்பி, மறுகணமே கண்பார்வையிலிருந்து மறைந்து போய்விட்டார், பசுமை குலுங்கும் பின்னணியில் மலர்ந்து வரும் குருக்கத்திப் பூவைப் போல் தோன்றிய அவரது கோஸாக் தொப்பியின் மீது கட்டப்பட்டிருந்த சிவப்புப் பட்டி, யைத்தவிர, அந்த மனிதரின் வெள்ளைச் சட்டையையோ அல்லது அந்தக் குதிரையையோ நாங்கள் காண முடியவில்லை. நாங்கள் காரை நிறுத்தினோம்; குதிரையில் வந்த அந்த மனிதர் எங்களோடு பேசுவதற்காக ரை தானிய வயலை விட்டு வெளியே வந்தார். “பாருங்கள் இதை! இந்த ஆண்டு இது மிகவும் அழகா யில்லையா? என்று ரை தானியப் பயிரைச் சுட்டிக் காட்டிய 'வாறே கூறினார் அவர்; இதைத்தான் அந்த அவிசாரிப் பயல் ஹிட்லர் அழிக்கப்பார்க்கிறான். அவன் நாசமாய்ப் போக! இந்தச் சண்டையை அவன் தொடங்கினால் அவன்தான் வருத்தப்படப் போகிறான். நிச்சயம் அவன் தான் வருந்தப் போகிறான். தோழர்களே, நான் வீட்டுக்குப்போய் இரண்டு நாட்களாகிறது. என்னிடம் புகையிலை தீர்ந்து போய்விட்டது. எனவே எனக்கு ஒரு சிகரெட் கொடுங்கள். கொடுப்பீர்களா? மேலும் போர் முனையில் போர் புதிய செய்தி என்ன என்ப தையும் கூறுங்கள். மிகவும் சமீபத்தில் வெளிவந்த அறிக்கைகள் என்ன கூறியுள்ளன என்பதை நாங்கள் அவரிடம் கூறினோம்; அவர் அதனைக்கேட்டுக் கொண்டிருக்கும் போது, சூரிய வெப்பத்தால் வெளிறி நரையோடிவரும் தமது மீசையைத் தடவி விட்டுக் கொண்டேயிருந்தார். நமது வாலிபப் பிள்ளைகள் உற்சாகத்தோடு மிக நன்றாகப் போரிட்டு வருகிறார்கள். இல்லையா? சரி, மூன்'றுபோர்களில் போராடியுள்ள அனுபவசாலிகளான நம்மையும் போரிட அழைத்தால் என்ன நிகழும்? அந்த நாஜிகளை நாம் அவர் களது அடி வயிறு வரையிலும், மருத்துவச்சிகள் அந்த வேசி மக்களின் தொப்புள் கொடிகளை எங்கே கட்டி முடிந்தார்களோ அதுவரையிலும், வெட்டிப்பிளந்து விடுவோம். நான் சொல் கிறேன். அவர்கள் தான் வருந்தப் போகிறார்கள்! அந்தக் கோஸாக் குதிரையை விட்டிறங்கித் தரையில் குந்தி அமர்ந்து கொண்டார்; காற்றடிக்கும் திசைப் பக்கமாகத் தமது முதுகைத் திருப்பிக் கொண்டு நாங்கள் அவருக்குக்

50

50