பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்வோரின் மீது கொள் ளும் வெறுப்பாகவும், 1.கைமை யாகவுமே இருக்கும். சோவியத் யூனியனது மக்களும் செஞ்சேனையும் நாஜிகள் இழைத்துவரும் கொடுமைகளுக்கெல்லாம் கணக்கு வைத்துக் கொண்டுதான் வருகிறார்கள். எங்களது மக்கள் சிந்திய ரத்தத்துக்காகவும், அவர்கள் தமக்குத்தாமே தேடிக்கொண்ட அவமாrcனத்துக்காகவும், அதிக LKான ரத்தத்)தயே விலையாகக் கொடுப்பார்கள். 1942 போர்முனைக்குச் செல்லும் வழியில் பென்சில்களையும், நோட்டுப் புத்தகங்களையும், சிறு எந்திரத் துப்பாக்கிகளையும் தாங்கிய ஆயுதபாணிகளாக நாங்கள் முன்னணிக்கு ஒரு காரில் சென்றோம்; ரோட்டுப் பாதையில் ஆயுத தாவாடங்களையும் உணவுப் பொருள்களையும், போர் வீரர்களையும் ஏற்றிக்கொண்டு சென்ற ஏராளமான லாரிகளை நாங்கள் முந்திக்கொண்டு சென்றோம். அந்த லாரிகள் அனைத்தும் பெர்ச் மற்றும் ஸ்புரூஸ் மரக்கிளைகளைக்கொண்டு மிகவும் சாமர்த்தியமாக மூடிமறைக்கப்பட்டிருந்தன ; அந்தக் கிளைகள் மேலிருந்து கீழ்நோக்கித் தொங்கி ரோட்டைப் பார்த்துக் கொண்டிருந்தன; இவற்றையெல்லாம் பார்க்கும் போது, புதர்க ளும் மரங்களும் ஒரு பிரம்மாண்டமாக ஊர்வல மாகப் புறப்பட்டு, கிழக்கிலிருந்து மேற்கு நே ா க் கி க் குடிபெயர்ந்து செல்வதைக் காண்பது போன்ற எண்ணமே ஏற்பட்டது. ஒரு காடு முழுவதுமே நகர்ந்து செல்வதுபோல் தோன்றியது. பீரங்கிப் பிரயோகத்தின் இடி முழக்கம் மேன்மேலும் பலமாகவும், மேன்மேலும் அருகிலும் கேட்கத் தொடங்கியது. நாங்கள் போர் முனையை நெருங்கிக் கொண்டிருந்தோம்; என்றாலும், செஞ்சேனையின் போக்குவரத்து அதிகாரிகள்தான் தமது சிவப்பு அல்லது மஞ்சள் கொடிகளை ஆட்டி அசைத்து இன்னும் பாதையைக் காட்டிக் கொண்டிருந்தனர்; லாரிகளின் வரிசை ரோட்டின் வழியாக மிக வேகமாக முன்னேறிச் சென்று கொண்டிருந்தன; அவற்றுக்குப் பக்கத்தில் நமது வலிமைமிக்க டிரெய்லர்--டிராக்டர்கள் கண கணத்து ஓடிக்கொண்டிருந்தன. வானிலிருந்து எந்த நேரத்திலும் நாங்கள் தாக்கப்படக்

கூடும் என்று எங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்ததால்,

66