உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதயத்தைத் தந்திடு அண்ணா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அறிவு மணங்கமழ்கின்ற ஆலயங்கள் அற்றுப்போய் ஆயிரம் தெய்வங்கள் உறைகின்ற கோயில்கள் கண்டுவிட்டார். மொழியுணர்வே இல்லாத வாயுணர்வின் மாக்கள் - தமிழ் அழியினும் வாழினும் என்னென்று இருந்திட்டார் அறநெறியே குறிக்கோளாய்த் திகழ்ந்திட்ட பெருநிலத்தில் பிறநெறிகள் பயிர் செய்தார்: பிழை குவித்தார். மழையற்றுப் போன வயல்போல மாற்றிற்றுத் தமிழர் மனம் அழுக்காறு அவா - வெகுளி - இன்னாச் சொல் நான்குமின்றி நடக்காது வேலையென்று நடந்திட்டார் சில தமிழர்! பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லையென்று பொருள் குவித்து வளம் செழித்த நாட்டில்- இன்று இருள் கவிந்து வாட்டம் கொடி போட்டதங்கே. வாடினாள் தமிழன்னை - சோகப் பாட்டுப் பாடினாள் தமிழன்னை; சுடுநெருப்பில் ஆடினாள் தமிழன்னை... ஓடினாள்.. ஓடினாள்.. ஒரு வழியும் கிடைக்கவில்லை! புவியூர் விட்டுப் புகழூரில் வாழுகின்றான் கவியூரின் பெருவேந்தன் குறளாசான்! ஆண்டு சென்று, 'அருமை மகனே! வேண்டுகோள் ஒன்று விடுத்தேன்" என்றாள். 'என்னம்மா?' என்றான் குறளோன். "தோண்டுகின்ற இடமெல்லாம் தங்கம் வரும் தமிழகத்தில் மீண்டும் நீ பிறந்திட வேண்டு மென்றாள். 'தங்கம் எடுக்கவா?” என்றான் 'தமிழர் மனம் வாழ்வெல்லாம் 20