உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதயத்தைத் தந்திடு அண்ணா.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

என்னுரை குறிஞ்சி சுப்ரமணியன் உரிமையாளர், குறிஞ்சி பர்னிச்சர் 14. வீட்டு வசதி வாரிய வணிக வளாகம் 48, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சாலை. (எல்.பி. ரோடு அடையாறு, சென்னை - 600 020 தொலைபேசி: 24902541, 24919944 அன்புடையீர், வணக்கம். பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு விழா செப்டம்பர் 15-ஆம் நாள் (15.9.2008) தொடங்குகின்றது. அந்த விழா தொடக்க நாளில் தமிழினத் தலைவர் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் இயற்றிய "இதயத்தைத் தந்திடு அண்ணா" என்கிற இரங்கல் கவிதையை என் எளிய அன்புப் பரிசாக அச்சிட்டு வழங்குகிறேன். தமிழ்க் கவிதை நூலுக்கு 1949-ஆம் ஆண்டு முதல் 1999-ஆம் ஆண்டு வரை சாகித்ய அகாதமி விருது வழங்கப்படவேயில்லை. என் கல்லூரித் தோழர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் மணி விழா 1998-ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் முத்தமிழறிஞர் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையில் சீரோடும், சிறப்போடும் நடைபெற்றது. கவிக்கோ அவர்கள் அவ்விழாவில் தன் நெஞ்சத்து உணர்வுகள் கொந்தளிக்கும் நிலையில் வெகுண்டெழுந்து 'சாகித்ய அகாதமி விருது பெற முடியாத அளவுக்கு தமிழ்க் கவிதை தரம் குறைந்து போய் விட்டதா? 3