________________
22 பின்னர் வந்த இடைத்தேர்தல் - இருமுனைகளில் நின்று மிகக் கடுமையாக மோதிக் கொண்டோம்! அண்ணாநகர், மயிலாடுதுறை எனும் இரு பெரும் வெற்றி களைப் பெற்றோம்! 1953 முதல் நானும் அவரும் ஒருமுனையில் நின்று கழகத்தின் சிப்பாய்களாக அண்ணாவின் காலடியில் வெற்றிக் காணிக்கைகளைக் குவித்தோம்! இருவர் மட்டு மல்ல; இயக்கத்தின் முன்னணித் தளபதிகள் -செயல் திறன் கொண்ட ஜீவநாடிகளான அன்பு உடன்பிறப்புக் கள் -அனைவரும் ஓரணியில் இருந்துதான்! 1972க்குப் பிறகு -- இருவரும் இருமுனைகளில்! சட்ட மன்றத்தில் அவருக்கு வெற்றி! நாடாளுமன்றத்தில் நமக்கு வெற்றி! மீண்டும் சட்டமன்றத்தில் அவருக்கு வெற்றி! அண்மையில் நடந்த இடைத்தேர்தலில் நமக்கு வெற்றி! இப்படி வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்த போதும் - இருவரும் இருமுனைகளில் நின்று; புராண பாஷையில் கூற வேண்டுமானால் அர்ச்சுனனும் கர்ணனும் போல மோதிக் கொண்டோம்! மோதிக்கொள்ள நேரிட் டது! ஆம், அது தவிர்க்க முடியாததாகி விட்டது! ஆனால் இப்போது தேர்தல் வந்தால்-நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமென்றால் அது நடந்தே தீர வேண்டும்? தேதியைத் தள்ளி வைக்க முடியாது! முடியுமென்று சொன் னாலும் அது ஜனநாயகமாகாது! அதனால் அந்தத் தேர்தலை சந்தித்தே ஆகவேண்டும்-சகலவலுவுடனும் களத்திற்கு வரப் போகிற இந்திரா காங்கிரசை எதிர்க்கப் போகிறோம்! நாம் எதிர்க்கப் போகிற அணிக்கு ஒரு தலைமை இருக் கிறது! அது திடகாத்திரமாக இருக்கிறது! அந்தத் தலைமை யில்தான் தேர்தல் களத்தில் நமக்கு எதிரான அணி நிற்கப் போகிறது! அதாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் நாம் எதிர்க்கப் போகும் அணிக்குத் தலைமை எது என்ப தும் - அமு தனக்குரிய வலிமையுடன் களம்புகப் போகிறது என்பதும் தெளிவான விஷயமாகும்! ஆனால் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலும் இணைத்து வைக்கப்படுமானால் -அப்போது நமது அணி