________________
அந்தத் தாய்கள் நம்மிருவரையும் நேசித்து அன்பு குழைத்து அரவணைத்தது என்பது; ஏதோ அரசியலுக்காக அவிழ்த்து விடும் கதையோ; கற்பனையோ அல்லவே! மறுக்க முடியாத உண்மைகளாயிற்றே!
மந்திரிகுமாரி படத்தில் நீங்கள்தான் கதாநாயகனாக நடிக்க வேண்டுமென்று நானும், மருதநாட்டு இளவரசி படத்துக்கு நான்தான் கதை வசனம் எழுத வேண்டு மென்று? நீங்களும் வாதாடி வெற்றி பெற்ற அந்தக் காலம்; ஓ! அது, முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய காலம் என்றாலும் அன்பு எனும் பொன்தகட் டில் செதுக்கப்பட்ட அழியாத எழுத்துகளன்றோ!
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு அடுத்த ராமநாதபுரமெனும் புறநகரில் நாம் இருவரும் ஒரே வீட்டில் வசித்த அந்த நாட்கள்... இருவரிடையே எழுந்த அரசியல் விவாதங்கள்... நீங்களே பலமுறை பேசியுமிருக்கிறீர்கள் - எழுதியுமிருக்கிறீர்கள் "என்னைக் கலைஞர் தன்பக்கம் ஈர்த்து விட்டார்” என்று! அந்த நினைவுகள் என் நெஞ்சில் அலைகளாய் மோதுகின்றனவே இப்போது!
அப்போதெல்லாம் அந்தச் சிறிய வீட்டிலிருந்து நீங்களும் நானும் இயக்குநர் காசிலிங்கமும் நண்பர் நம்பியாரும் கோவை நகருக்கு ஒரு குதிரை வண்டியில் தானே போவோம்! ஆம்; அதுவும் வாடகை வண்டி! ஒரு ஆளுக்கு இரண்டணாவாடகை!
மதியம் - பெரும்பாலும் கோவைக்குக் குதிரை வண்டிச் சவாரி! கடைத்தெரு முனையில் இருந்த 'குருசாமி நாடார்' மிலிடரி ஓட்டலில் சாப்பாடு! அதற்கிடையே எத்தனை சிரிப்புவெடிகள்! சிந்தனையைத் தூண்டும் உரை யாடல்கள்! ஒன்றா இரண்டா? இப்படி ஓராயிரம் உண்டே! கலை உலகில் நம்மைப் பிணைத்து வைத்த நட்பின் முத்திரை களைக் காலம் கரைத்திட முடியுமா? முடியவே முடியாது!
அரசியலில் இன்று நமக்கிடையே மாறுபாடு இல்லை என்று சொன்னால் - அதனை நீங்களும் நானுமே ஏற்றுக்