________________
வெற்றி விளக்கு! ஏ நச்சுக்கோப்பையைக் கையிலே ஏந்தி-நெஞ் சிலே வீரத்தை ஏந்தி - மொழியிலே கொள்கையை ஏந்தி - உயிர்விட்டிருக்கிறார்கள். நெருப்பிலே தள் ளப்பட்டபோதும் உடலைச் சாம்பலாக்க முடிந்ததே தவிர அவர்களின் உயர்ந்த லட்சியத்தைப் பொசுக்க முடியவில்லை. துப்பாக்கியிலிருந்து குண்டுகள் புறப்பட்டு அவர்கள் மார்பைத்துளைத் திருக்கின்றன; அப்போதும் கொள்கையிலே ஓட்டை ஏற்படவில்லை அலைந்து திரிந்திருக்கிறார் கள், ஆதரிக்க யாருமில்லாது விரட்டப்பட்டிருக்கி றார்கள், வசைமாரிகளைத் தாங்கியிருக்கிறார்கள். மக்களின் முன்பு பைத்தியக்காரர்களாக மதிக்கப் பட்டிருக்கிறார்கள். காணத்தகாதவர்கள் களாக - காத கர்களாக - கயவர்களாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். ஏச்சு ஒருபுறம் - ஏளனம் - ஒருபுறம் இப்படி மாறிமாறி எதிர்ப்பு அம்புகள் ஏவப்பட்டிருக்கின் றன. வ்வளவையும் சமாளித்திருக்கிறார்களே தவிர சாய்ந்துபோனது கிடையாது. சுயநலம் அவர்கள் வாழ்வில் சுற்றிக்கிடந்தது. சொந்த விஷயம் அவர்கள் கொள்கையை சுக்கு நூறாக்கியது கிடையாது. குடும்பம் அவர்கள் பாதைக்கு இடையூறு விளைத்தது கிடையாது. கோலாகலத்தை விரும்பியது கிடையாது. அடிக்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள் சாக வில்லை. அதற்கு மாறாக புது உடம்பு பெற்றார்கள். புகழ் உடம்பு பெற்றார்கள். நெருப்பு அவர்கள் சாக