பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

183


தத்துவமேதை என்று அழைக்கப்பட்ட டி.கே. சீனிவாசன் என்பவருக்கு நிதியளிப்பு விழா நடந்தபோது, ‘இரயில்வே துறையில் திருச்சி சந்திப்பில், பொறுப்பான அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த நான், எனது வாழ்க்கையைக் கட்சியை நம்பிக் கெடுத்துக் கொண்டேன்’ என்று டி.கே.சி. வருத்தமாகக் குறிப்பிட்டார்.

அறிஞர் அண்ணா அவர்கள் அவருக்குப் பதில் கூறும் போது, கட்சியை நம்பித் தனது வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டதாக இங்கே டி.கே. சீன்ரிவாசன் குறிப்பிட்டார்.

ஒருவர் தனது வாழ்க்கையில் நாட்டு நலன் முன்னேற தொண்டாற்றுவது அவசியம்தான். அதைவிட முக்கியமானது வீட்டு நலன் என்பதையும் உணரவேண்டும். வீடு நன்றாக வாழ்ந்தால்தான் நாடும் வாழும், உயரும், நலன் பெறும்! நாட்டுக்காக உழைத்து வீட்டைக் கெடுத்துக் கொண்டேன் என்று கூறுபவன் எனது தம்பி அல்ல’ என்றார்.

இதற்குப் பிறகுதான் டி.கே.சீனிவாசன் மாநிலங்கள் அவை உறுப்பினராக்கப்பட்டார். தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவன மேலாண்மை இயக்குநராகவும் ஆனார்.

அறிஞர் அண்ணா அவர்களது வாக்கை ஜே.பி.ஆர். வேத வாக்காக ஏற்றுக் கொண்டு, ‘நீதியின் குரல்’ என்ற நாளேட்டை திராவிடர் இயக்கத்துக்காக நடத்தினார். பிறகு செல்வர்களும் மதிக்குமளவிற்கு அன்னை சத்தியா என்ற பெயரில் கல்லூரி வகைகளை நடத்தி அவைகட்கு முதல்வராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

Anna

“Home Land”

அறிஞர் அண்ணா அவர்கள் 1962-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளர்களில் 50 பேரை வெற்றி பெறச் செய்து சட்டமன்ற உறுப்பினர்களாக்கினார். காஞ்சிபுரத் தொகுதியில் அறிஞர் அண்ணா தோல்வி கண்டார். பிறகு தில்லி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரானார்.