பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

197


படித்தவர்களுக்குத் தெரியும் - அவர்களது எழுத்துக்களின் அற்புத அருமைகள்!

பகீரதன் ‘ஓம் சக்தி’ என்ற பத்திரிகையிலும் கட்டுரைக் கொடை செய்தவர்தான்! கூற முடியுமா குறை அந்தக் கட்டுரைகளை? உண்மையான பத்திரிகையாளர்களாக மக்கள் இடையே அறிவு உலா வந்த ஏழை எழுத்தாளர்களாகவே மாண்டவர்களாவர்!

‘கலைமகள்’

கி.வா. ஜ!

‘கலைமகள்’ என்ற இலக்கியப் பத்திரிகையை கி.வா. ஜகன்னாதன் ஆசிரியராக இருந்து நடத்திய காலம் வரை, வெறும் இலக்கியம், கவிதை, வரலாறு, ஆன்மிகம் கருத்துக்களை உடையதாக நடத்தப்பட வில்லை. ஆராய்ச்சிகளையே அந்த இதழ் அரியணையாகக் கொண்டு இலக்கிய உணர்வாளர்களைக் கோலோச்சியது என்றால் மிகையன்று.

சேக்கிழார் பெருமானுடைய திருத்தொண்டர் மாக்கதையை கி.வா.ஜ. ஆராய்ச்சி செய்த கோணம் - நேர்க்கோணம். நீள் சதுரமிட்ட சதுரர் கி.வா.ஜகன்னாதன். அவரால் நடத்தமுடியாதா - ‘குங்குமம், குமுதங்களை?’. எனவே, கலை மகள் ஏடு ஓர் இலக்கிய ஊட்டி; கவிதைக் கொண்டைக்கானல்; ஆன்மிகத் திருச்செந்தூர்! கடலழகுக் காட்சிகளே அதன் கோலம் எனலாம்!

‘அமுத சுரபி’

விக்ரமன்

வரலாற்று எழுத்தாளர்களில் தென்றலென விளங்கும் திரு. விக்ரமன் அவர்கள், ‘அமுத சுரபி’, மாத இதழுக்கு ஆசிரியராக இருந்தார். அந்தப் பத்திரிகை மணிமேகலை அட்சய பாத்திரம் போல கலை, இலக்கியக் காட்சிகளைத் தந்தது. பல ஏழை எழுத்தாளர்கள், எழுத்தர்கள் பசிப் பிணிகளை அது நீக்கியது. அதற்கொப்பவே, ‘அமுத சுரபி’ ஏடதனில், கற்றார் போற்றும் வண்ணம் அமுதக் கருத்துக்களைத் திங்கள்தோறும்