பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

மத்திய-மாநில அரசுகளிடம் எவ்வாறு செய்திகளைத் திரட்டலாம்!


பயன்பெறும் வகையில் மன்ற உறுப்பினர்களது சட்டச் சிந்தைகளுக்குகந்தவாறு செயல்படுகின்றார்கள். அதனால், அந்த மன்றங்களின் செயற்பாடுகளைத் திரட்டிப் பத்திரிகைகளில் வெளியிட்டு மக்களுக்குத் தெரிவிக்கும் பொறுப்பு செய்தியாளர்களுக்கு உண்டு! அது இதழ்களின் கடமை!

மாநில அரசுச் செய்தியாளர்களுக்கு - அரசின் மைய இடம் அலுவலகத்தில் ஒரு தனி அறை, தொலைபேசி வசதிகளுடன் அமைந்துள்ளது. அங்கு எல்லாப் பத்திரிகைச் செய்தியாளர்களும் கூடுவார்கள். அரசுப் பிரிவைச் சார்ந்த செய்திகளை நிருபர்கள் அங்கே பெறலாம். அறிவிக்கை மூலமும், தொலைபேசிகள் வாயிலாகவும் செய்திகளை அங்குத் திரட்டலாம்.

அதன் பின்னர் செய்தியாளர்கள், அமைச்சர்களது அறைக்குச் செல்வார்கள். அங்குள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடும் தொடர்பு கொண்டு செய்திகளைத் திரட்டுவார்கள்.

மக்கள் தகவல் தொடர்புத் துறை இயக்குநர் அறைக்குச் சென்றால், அங்கே அரசு சம்பந்தப்பட்ட முக்கியச் செய்திகளை வழங்குவார்கள். அமைச்சகங்களின் செய்திக் கூட்டங்கள், அரசுச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் வழங்கும் பேட்டிகள், அரசு நடத்தும் இதழ்கள், அரசுக்குச் செல்லும் தூதுக் குழுக்களின் செய்திக் கசிவுகள் (Leakage) ஆகியவற்றின் மூலமும் மாநில அரசுச் செய்திகளை திரட்டலாம்.

மத்திய அரசு
செய்திகள்

மாநில அரசுத் துறைகளைப் போலல்லாமல், மத்திய அரசின் ஒவ்வொரு அமைச்சர் அறைக்கும் தனித்தனியாகச் செய்தியாளர்கள் சென்று செய்திகளைச் சேகரிக்கும் முறையும் உள்ளது. அரசின் மக்கள் தொடர்புத் துறை அரசுக்குரிய செய்திகளை வழங்குகின்றது.