பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332

பத்திரிக்கை ஆசிரியராக தகுதிகள்; திறமைகள்!


எழுத்துக்களில் சமுதாயத்தை மேம்படுத்தும் கொள்கை உணர்ச்சி வேகம், சீறி எழும் செயல் துடிப்பு, எழுதும் எழுத்துக்களில் மெய்மை நடமாட்டங்கள், கற்பனைக் கலவாமைகள்; என்ன எழுத வந்தாரோ அதன் மூலக் கூறுகள்; பண்புகள் உயிர்த் தோற்றம்; வெளித்தோற்றமற்ற உள்ளார்ந்த தன்மை; எந்த சந்தேகமும், எவருக்கும், எப்போதும், தோன்றாமலிருக்குமாறு எழுத வேண்டும்.

அப்போது தான் அந்தப் பத்திரிகையை மக்கள் வாங்கிப் படிக்கும் ஆர்வம், வேட்கை, வெறியுணர்வு தோன்றும்.

பத்திரிகையில் வெளிவரும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் சொன்னதை எழுதுவதாக, எழுதும் வண்ணம் செல்வாக்குப் பெறுவதாக அமைந்தால்தான், அந்த ஏட்டுக்கு மக்களிடையே சொல்வாக்கும், செல்வாக்கும் அலைமோதி சிறந்த விற்பனையை அது அறுவடை செய்யும்.

ஆசிரியரால் எழுதப்படும் எந்தக் கருத்தும், சம்பவமும், நிகழ்ச்சிகளும், காரணமுடையதாக, வாதங்களை உருவாக்கும் காரணமாக, வாதச் சான்றுடையதாக, நம்பிக்கை நாணயச் சான்றுடைய செயல் விளக்க நோக்கமுடையதாக, அறிவாராய்ச்சிச் செறிவுக்கு முரணற்றதாக, யூக, வியூகங்களுக்கு வாதமிடும் இணக்கம் உடையதாக, உணர்ச்சிக் குன்றாமல் தொடர்ந்து படிக்கின்ற சொல்லாட்சி இன்பத்தை வழங்குவதாக, எழுதும் எழுத்துக்களில் இருத்தல் அவசியம்.

இத்தகைய எழுத்தாற்றலை நிறுவிடும் எழுதுகோலுக்கு நினைவாற்றல் - சுரபியாக, சிந்தனையும் கூர்மை மனமும் அமைய வேண்டும். பழைய சம்பவங்களில் உள்ள சங்கிலித் தொடர்புச் சிந்தனைகள், கருத்து அமைதி, கருத்து நிலைப்பாடு, எந்தப் பிரச்னையானாலும் நிதானமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல் ஓர் ஆசிரியனுக்கு இருந்தால்தான் பத்திரிகை முன்னேறும்.

ஆசிரியனாகப் பொறுப்பேற்பவனுக்கு குறைந்தது 50 ஆண்டுக் கால இலக்கிய, கலை, அரசியல், சமுதாய மறுமலர்ச்சி