பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348

எழுத்துரிமை, பேச்சுரிமைகளைக் காக்க கட்சிப்பத்திரிகைகள் நடத்துவது எப்படி?


நுண்ணாய்வுகள், அறிவியல் சாதனைகள், கலைத் துறை முன்னேற்ற ஆய்வுகள், கருத்துப் படம், எழுதும் பயிற்சி, ஆர்வ உழைப்பு ஈடுபாடு, தலையங்கங்களது, வெற்றிகள், தொடர் வரலாற்றுப் புதினம் வெளியீடு, சங்க கால இலக்கிய ஆய்வுச் சிந்தனைகள், பொருளாதார வளர்ச்சி நிலை, அரசியலில் ஆளும் கட்சி ஆட்சியின் அவலங்கள், அதற்கான ஆக்கப் பணிகளை கூறும் திட்டங்கள், விளையாட்டுச் சிந்தனைகளின் பெருமைகள், சினிமா-நாடகம், இசைத் துறைகளுக்குரிய விமர்சனங்கள் ஆகியவற்றுக்கான துரண்டுகோலாக அமைந்தால் அதுதான் பத்திரிகை ஆற்றும் மக்கட் தொண்டு!

இத்தகையப் பத்திரிகையின் வளர்ச்சிக்குப் பொது மக்கள் ஆதரவு காட்டுவதுதான், பத்திரிகையும் மக்களும் Heart and Heart அதாவது மனம் விட்டுப் பழகும் பண்பு நிலையில் உள்ளார்கள் என்று பொருள்!