பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

355


உழைப்பைச் செய்தியாளர் நேருக்கு நேர் பேட்டி எடுத்துப் பத்திரிகையில் வெளியிட்டால் அதைப் படித்து விட்டு மண் சுமப்பவன் நாளை சட்டமன்ற உறுப்பினராகவும் வரக் கூடுமில்லையா? வந்தவர்கள் உண்டு! இவை எல்லாம் தற்செயல் The Casual Interviews பேட்டிகளாக அமையலாம் தானே!

தொலைபேசியில் பேட்டி எடுப்பதை கூடுமான வரைத் தவிர்த்து விடுதல் செய்தியாளர்களுக்கும், பத்திரிகைகளுக்கும் மிக நல்லது; ஏனென்றால், அந்தச் செய்தியை வழங்கியவருக்கு சாதகம் விளைந்தால் செய்தியாளரையும், பத்திரிகையையும் பாராட்டுவார். ஒருவேளை சரியாக கவனிக்க முடியாமல், கரகரப்பு ஒலிகளால் சரியாக கேட்க முடியாமல் இடையில் தொலைபேசி தடை ஏதாவது ஏற்பட்டு அந்தச் செய்தி பாதகம் விளைவிக்குமானால், நான் அது போல ஒரு செய்தியை வழங்கவில்லை என்று அவர் மறுத்து விடுவார். அதனால் பத்திரிகைக்கும் கெட்ட பெயர், செய்தி சேகரித்தவருக்கும் அவப்பெயர் வந்து சேரும். எனவே, தொலைபேசியில் செய்தி சேகரிப்பதைத் தவிர்ப்பது கூடுமானவரை நல்லது.

செய்தியாளர், செய்தி பெறுவோரிடம் நம்பிக்கையாளராக நடக்க வேண்டும். ‘இந்தச் செய்தியை வெளியிட வேண்டாம்’ என்று ஒரு தலைவர், மக்களால் போற்றப்படுபவர் கூறினால் அதை வெளியிடவே கூடாது. Off the record என்று அவர் கூறியே சொல்லும் போது அதை மீறினால், மறுபடியும் அந்தச் செய்தியாளர் பிறர் எவரிடமும் செய்தி பெற முடியாது. எல்லோருமே.அவரை வெறுத்து ஒதுக்கும் நிலை ஏற்படும்.

ஒரு செய்தியாளர் பேட்டியை வெற்றிகரமாக முடிக்க, பேட்டி தருபவர் யார், அவர் கல்வித் தகுதி, துறை அனுபவம், மக்களிடம் உள்ள தொடர்பு அல்லது அரசிடம் அவருக்குள்ள செல்வாக்கு ஆகியவற்றை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, தான் காணும் பேட்டிக்கான கேள்விகளைத் திட்டமிட்டுப் பட்டியலிட்டுக் கொள்வது சிறந்தது. பிறகு அந்தக் கேள்விகளில் கேட்க வேண்டியதைக் கேட்டு பதில் பெறலாம்; நீக்க வேண்டியதை நீக்கி விட்டு விடலாம். அதை விட்டு விட்டு பேட்டி நடக்கும் இடத்திலே சமாளித்தும் கொள்ளலாம் என்று முன் தயாரிப்பின்றி சென்றால் நிச்சயம் குழப்பம் ஏற்பட்டு,