பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

உலக நாடுகளில் உருவான பத்திரிக்கை வளர்ச்சிகள்



இன்று இங்கிலாந்து பத்திரிகை உலகத்தை மாடர்ன் ஜார்ன்லிசம் ஆக்ரமித்துக் கொண்டு உலக முன்னேற்றத்துக்காக உழைத்து வருவதைப் பார்க்கின்றோம்.

நார்வே நாட்டுப்
பத்திரிகை சேவை

உலகப் புகழ் பெற்ற நாடகப் பேராசிரியர் இப்சன் என்பவரின் நண்பர் பிஜோர்ன்ஸ்ட், ஜெர்ன் பிஜோர்ன்சன் (Bjorrst Jern Bjornson) என்பவர் ‘மார்கன் பிளாடட்’, Margan Plata” என்ற நாளேட்டை, 1854ம் ஆண்டில் அவர் நடத்தினார். அந்தப் பத்திரிகையில் இலக்கியம், அரசியல், கவிதைகளை வெளியிட்டார். இப்சன் அந்த பத்திரிகையில் புகழ் பெற்ற நாடக விமர்சனங்களை எழுதிப் புகழ் பெற்று உலகுக்கு அறிமுகமானார். இல்லஸ்ட்ரேட்டட் ஃபோக் பிளாட் என்ற தினசரி பத்திரிகையை பியார்ன்ஸ்சன் என்பவர் துவக்கி, அந்தக் காலத்திலேயே கலைத் துறையில் பெரும் புரட்சி செய்தார். மக்கள் அந்த நாளேட்டை விரும்பி வாங்கிக் கலைத்துறை மறுமலர்ச்சிக்கு ஆதரவளித்தார்கள்.

நமது இந்திய நாட்டில் நாம் இன்று பாடி வரும் ‘ஜனகனமன அதி நாயக ஜெயகே’ என்ற பாடலைப் போல ‘நார்வே பூமியை நாம் நேசிக்கிறோம் என்ற பொருளில் ஒரு தேசிய கீதம் பாடலைப் பியார்ன்சன் எழுதினார். அந்தப் பாடல் பிற்காலத்தில் நார்வே நாட்டிற்கு 1859ம் ஆண்டில் தேசிய கீதப் பாடலாகிப் புகழ் பெற்றது.

அந்த ஆசிரியர் நார்வே தேசிய கீதம் போன்ற பல பாடல்களை எழுதியதோடு நில்லாமல் - கலைத் துறையிலும், மதத் துறையிலும், தனது சீர்த்திருத்தக் கருத்துக்களை எழுதியதால், அந்த நாட்டு ஆட்சியின் எதிர்ப்புகளை அவர் ஏராளமாகப் பெற்றவரானார்.

பியார்ன்சன், அந்தக் காலத்திலேயே நார்வே அரசு செய்து வந்து பல அரசு தில்லுமுல்லு ஊழல்களைச் சாடினார். சமுதாயச சீர்கேடுகளை மிக வன்மையாகக் கண்டித்துப் புகழ் பெற்ற அந்த ஆசிரியர், நாடகமேதை இப்சன் எழுதிய