உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

11


'மிஸ்டர் குருமூர்த்தி, உங்கள் கஷ்டம் எங்களுக்குப் புரிகிறது. ஆனால், எங்கள் கஷ்டம் உங்களுக்குப் புரிய வில்லை. 'நீங்கள் குழந்தையையே பார்த்துக் கொண்டிருங்கள்' என்று படியளக்கிறவன் சீட்டைக் கிழித்து வீட்டுக்கனுப்பிவிடப் போகிறான், நானும் மத்தியானமே வந்து விடுவேன் குழந்தையைப் பார்த்துக் கொள்ள; உனக்கும் பகல் தூக்கம் கெடாது.
'எதிர்க்கட்டுப் பாட்டிக்குத் தாங்க முடியவில்லை. பிடித்து நறுக்கும் கீரையைக்கூடக் கீழே வைத்துவிட்டாள். வெல்லப் பொதிமாதிரி உடல் குலுங்கிற்று. பொக்கை வாய் முகத்தை இருகூறாய் வெட்டிற்று. மார்க் கபம் 'கிண்'ணென்றது. சிரிப்புத் தாங்காமல் புரைக்கேறி இருமிக்கொண்டே உச்சந் தலையைத் தட்டிக்கொண்டாள். கண்களில் நீர் கொட்டிற்று.
சின்னாவுக்கு ரோஸ்க் கண்ணிர் துளும்பிற்று. ஆனால், குருவுக்கு இரக்கமில்லை.
இரு இரு, கண்ணிரையெல்லாம் இப்பவே கொட்டி விடாதே. அப்புறம் சாப்பிடும்போது குழம்பு ரஸ்த்துக்கு உப்புப் போறாமல் இருக்கும். அப்போ இந்த வீட்டில் எதுவும் வீண் பொகக்கூடாது
'வீண் போகாது- சின்னாவின் குரல் இறுகிற்து,
 ஒஹோ பிடி சாபமா? இம்மண்ணகத்தின் பெண்ணகக் கண்ணகம் கண்ணகியா நீ?
குழந்தையைப் பிடிங்கோன்னா நேரமாறது. இப்படி வம்படித்து வம்புக்கிழுக்க நேரமாகல்லையாக்கும்’
‘மணியென்ன?-ஓ மை காட்-போடு போடு, ஆன வரைக்கும் போடு
‘எல்லாம் ஆயாச்சு? ஆனவரைக்கும்னு சொட்டைச் சொல் வேறேயாக்கும். ஏன் குளிக்கல்லையா?
போடு போடு...குளியாவது இனிமேல்! இன்னிக்குக் குளிக்கு முழுக்கு. இன்று கழுத்து மட்டும் மேக்அப்போடு சரி. எப்படியோ எங்களையும் உங்கள் மாதிரி ஆக்கி விடுகிறீர்கள் என்ன இன்னும் பிருகாவைக் காணோம்! பசி வேளைக்கு ஒரு நிமிஷம் தப்பினால் ஊரைக் கூட்டுவாளே!.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/11&oldid=1672528" இலிருந்து மீள்விக்கப்பட்டது