பக்கம்:இதழ்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இதழ்கள்

50 இதழ்கள் "உன்னுடைய கேள்விகளுக்கு அப்பாவால் கூடப் பதில் சொல்ல முடியுமோ, முடியாதோ! அப்படியாவது இப்போ உனக்குத் தெரிந்து என்ன ஆகவேனும்?” - 'எனக்குத் தெரியவேணும்; தெரியவேணும்?” ஆர்மோனியப்பெட்டியில் ஒற்றைப் பல்லை அமுக்கினாற் போல அவன் குரலில் அவசரமும் கவலையும் பிடிவாதமும் ஒலித்தன.

  • ஏன்? "அப்படியெல்லாம் எனக்குத் தோன்றுகிறதே!’ அவள் கிராமத்தில் நதிப்பெருக்கை வேடிக்கை பார்த் திருக்கிறாள். கக்கலும் கரிசலுமாம், கோபச் சிவப்பில் புரண்டு வரும் வெள்ளத்தில் உயிரோடு பிராணிகள் கூடச் சில சமயங்களில் அடித்துக் கொண்டு வரும். ஒரு சமயம் ஒர் ஆளே... நீர்ச்சுழலில் அவன் தலை தஞ்சாவூர்ப் பொம்மை மாதிரி மூழ்கி மூழ்கி எழுந்த தவிப்பு-தலையை உதறிக் கண்களை இறுகப் பொத்திக் கொண்டாள்.

'எனக்குத் தெரியவேனும் எனக்குத் தெரியவேணும்' :கண்ணை மூடுகிறது, திறக்கிறது; திறக்கிறது, மூடு கிறது. அவன் கை மாறி மாறி மூடித் திறந்தது. கண்ணை மூடினால் தூக்கம், திறந்தால் விழிப்பு. கண்ணை மூடிக் கொண்டிருந்தால் ராத்திரி; திறந்து கொண்டிருந்தால் பகல். திறந்து மூட முடிந்தவர்களுக்குப் பகல் ராத்திரி; அப்போது எனக்கு எப்போதுமே ராத்திரியா அம்மா?” அவள் காலடியில் பூமி விட்டது. 'அம்மா, இன்றைக்கு நாங்கள் பையன்கள் எல்லோரும் கண்ணாமூச்சி விளையாடினோம். ஒடிப் பிடிக்க என் முறை வந்தது. ஒரு பையன் என் கண்ணைக் கட்ட வந்தான். அதற்குள் இன்னொருத்தன், கண்ணனுக்குக் கண்ணைக் கட்ட வேண்டாமடா கண்ணன் எப்போதுமே கண்ணாமூச்சி தானடா!' என்றான். உடனே எல்லாரும் சிரித்துக் கொண்டு தாளம் போட்டுக் கொண்டு, கண்ணன் எப்போதுமே.கண்ணா மூச்சி, கண்ணன் எப்போதுமே கண்ணாமூச்சி என்று என்னைச் சுற்றிச் சுற்றிப் பாடிக் குதித்தார்கள், எனக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/50&oldid=1247329" இலிருந்து மீள்விக்கப்பட்டது