பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துருவன் சித்தி. 127 முழுமுதற் கடவுளைச் சுட்டிக்காட்டி யருளினர்கள்; இனி அப்பெருமான் திருவுள்ளமுவந்து அருள் செய்யும்படி நான் ஜெபிக்க வேண்டிய மந்திரத்தையும், ஆராதனஞ் செய்ய வேண்டிய முறையையும் பிரசாதிக்க வேண்டும்' என்று கேட்டான். அதற்கு அம் முனிவர்கள், “ராஜபுத்திர! விஷ்ணுமூர்த்தியிடம் பக்தி செய்ய வேண்டுமென்று விரும்பு கின்ற ஒருவன், முதலில் இவ்வுலகப்பற்றுக்களே அறவே ஒழிக்கவேண்டும்; பின்பு மனத்தை முகுந்தனது திருவடிக் கமலங்களிலே நிச்சலமாகச்சேர்த்து, வேறு எண்ணங்க வளின்றி அத்திருவடிகளையே பாவித்துக்கொண்டு, உளந்து யஞய் வியஷ்டி சமஷ்டி ரூபமாகப் பிரகிருதியும் புருஷனும் சரீரமாகவுடைய சுத்த ஞான மயமான வாசுதேவனுக் குத் தெண்டன் சமர்ப்பிக்கின்றேன் என்னும் பொருள் சேர்ந்த மகாமந்திரத்தைச் ஜெபிக்கவேண்டும்; உனது பாட் டஞகிய சுவாயம்பு மனுவும் இம்மந்திர உபாசனையில்ை தான் எவரும் அடையப்பெருத பெரும் பேறுகளையெல் லாம் அடைந்தான்; யுேம் அப்படியே இம்மகா மந்திரத்தை ஜெபித்துத் திருமகள் தலைவனுகிய திருமாலே ஆசாதனஞ் செய்ய்க்கடவாய்' என்று கட்டளையிட்டருளிஞர்கள். துருவன், முனிவர் எழுவரும் இங்ஙனம் இயம்பிய உப தேசத்தைக்கேட்டு,ஆனந்தக்கடலுள் மூழ்கி முனிவர்களேத் தொழுது, அவ்வனத்தை நீங்கி அப்பாற் சென்ருன் செல் லுங்கால் நாதமுனிவர், அவ்வனத்தின் இடைவழியில்ே துருவனுக்கு எதிரே வந்து தோன்றினர். அவர் துரு வனப்பார்த்து, இளைஞ! 'பலவிதச் செல்வமும் பாங்குடன் அமைக்க ராஜமாளிகையை விட்டு, இக்கானக வழியாக