பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துருவன் சித்தி. 129 அகமும் புறமும் தாயணுய், சிக்கத்தையும் மூச்சையும் ஆடக்கி, மோன முத்திரை வழியில் கின்று தவத்தைச் செய்வாயாக’ என்று சொல்லி அவன் செவியில் துவாக சாக்ஷரமாகிய வாசுதேவ மந்திரத்தையும் உச்சரித்துப தேசித்துப் பின்னர் மகன் பிரிவால் வாடியிருந்த உத்தான பாகனேக காணுதற்குப் புறப்பட்டுச்சென்ருர். துருவன், நாகர் சென்றபின் அவர் ஆணையின்படி மதுவனத்தையடைந்து, யமுனைப்புனலில் படிந்து, முனிவர் கள் உபதேசித்த முறைப்படியே தேவசிகாமணியாகிய திரு மாலது பாத கமலங்களைத் தனது இருதய கமலத்தில் இடை விட்ாது தியானித்துக் கொண்டு அருந்தவஞ் செய்யத் தொடங்கினன். அவன் தவம் புரியும்போது, முதல் மாதத் தில் மூன்று நாளுக்கொருமுறை கனிகளையும், இரண்டாம் மாதத்தில் ஆறுகாளேக்கொருமுறை இல் சருகுகளையும், மூன்ரும் மாதத்தில் ஒன்பது நாளைக்கொரு முறை யமுனே நீரையும், நான்காம் மாதத்தில், பனிரண்டு நாளைக்கொரு முறை வாயுவையும் உணவாகக்கொண்டு உண்டு, ஐக்தாம் மாத முதலாக இவைகளுள் ஒன்றுமின்றிக் கடுத்தவம் புரிங் தான். இச்சிறுவனது தவ மகிமையை அறிந்த அமலன் வியந்து கருணை கூர்ந்து, அவனது உள்ளக்கமலத்தையே உறைவிடமாகக்கொண்டு வந்து தங்கினர். இவ்வாறு அண்ட பிண்ட சராசரங்களையெல்லாம் தன் சரீரமாகக் கொண்ட பகவான், யோகித்திரனை துருவனுள்ளத்தில் குடிகொண் டிருந்தமையால், பூமி கேவி அவனத் தாங்கமாட்டாது தளர்ந்தாள். அவள், துருவன் சாயும் பக்கமெல்லாம் உடன் சாய்ந்தாள். துருவன் இற்றைவிரலை ஊன்றிய அளவில் மலே கடல் முதலிய எல்லாப்பொருள்களும் நடுங்கின; உலகமெல் 8