பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுதான் திராவிடநாடு

41

படும் ஒற்றுமை, தெற்கிலும் கிழக்கிலுமே காணப்படுவதாகும். அது வரலாற்றில் தெற்கிலிருந்த தென் கிழக்கு, கிழக்கு, வடகிழக்காக இடஞ்சுழித்துச் செல்வது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே பாரத கண்டத்தின் ஒற்றுமை என்பது, உண்மையில் அதில் ஒழுங்கான தேசியக் கட்டமைப்புடைய உயிர்ப் பகுதியான திராவிட நாட்டின் ஒற்றுமை, திராவிட நாடு கடந்த திராவிடப் பண்பாட்டின் விரிவெல்லை ஆகியவையேயன்றி வேறன்று.

திராவிட நாட்டின் தனிப் பேரினமான திராவிட இனமே, இந்தியத் துணைக் கண்டத்தின் அடிப்படை இனம் என்பதை இந்தியக் கூட்டுறவரசு வெளியிட்டுள்ள இனவாரிப் படமே தெளிவாகக் காட்டும். விந்தியம் வரையுள்ள தென்னகப் பரப்புத் தூய திராவிட இனமாகவும், பஞ்சாப், இமயமலையடிவாரம் தவிர மீந்த பகுதிகள் பல்வேறினங்களுடன் கலந்த திராவிட இனமாகவுமே அதில் குறிக்கப்பட்டுள்ளன. ஆனால் இது திராவிட இனத்தின் தேசியப் பரப்பல்ல. அதன் உலகளாவிய நாகரிகப் பரப்பின் ஒரு பகுதியே. ஏனெனில் இன வரலாற்று அறிஞர், பண்பாட்டு வரலாற்று அறிஞர் கூற்றுப்படி, தென்கிழக்காசியா தென் ஆசியா, மேலை ஆசியா, தென் ஐரோப்பா, வட ஆபிரிக்கா, நடு அமெரிக்கா ஆகிய பெரும் பரப்புக்களின் இன, நாகரிக அடிப்படைப் பண்பாடே திராவிட நாகரிகத்துடன் தொடர்புடையது என்று கூற இடமுண்டு.

திராவிடம் தேசிய இனமா என்று வடவரும் வடவர் பக்தரும் கேட்கும் கேள்வி இவ்வாறு அவர்களுக்குத்தான் ஆபத்தான கேள்வியாக முடிகிறது. ஏனெனில் அதன் விடை திராவிடம் தேசிய இனம் என்பது மட்டுமன்று, திராவிடம்தான் பண்டை உலகின்3