பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

தமிழரும், மராத்தியரும், வங்காளியரும் பஞ்சாபியரும், அஸ்ஸாமியரும், ஆந்திரரும், தனித்தனியே கலை வளர்த்தார்கள் என்றாலும், எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து பாரத சமுதாயத்தை, அவற்றின் சிறப்பியல்களுக்கு ஏற்ற வகையில் ஒரு ஒருமைப்பாட்டை உருவாக்குகின்றன. அதனால் பலரும் பலபடப் பேசினாலும்,

பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு

என்று பாரதியாரோடு சேர்ந்து நம்மால் கட்டியம் கூற முடிகிறது.

21