________________
பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோருக்குக் கல்வி, வேலை வாய்ப்புகளில் இருந்த விகிதாச்சாரத்தை உயத்தியது. குடிநீர் வாரியம் அமைத்து நகரங்கள், கிராமங்களுக் குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் விரிவான திட்டம். மின் விளக்கு இல்லாத கிராமங்களே இருத்தலாகாது எனத் திட்டமிட்டு, ஏறத்தாழ முழுமையுமே முடிக்கப் பட்ட சாதனை. பாசன வசதியைப் பெருக்கத் திட்டமிட்டு, ஒன்ப தாண்டுக் காலத்தில் பல லட்சம் ஏக்கராக்களுக்கு புதிய வசதிகள். நில உச்சவரம்புச் சட்டத்தை மேலும் தீவிரமாக்கி, நிலமில்லாத ஏழைகட்கு வழங்கிய அரியபணி, குடியிருப் புக்களைச் சொந்தமாக்கும் சட்டத்தின் வாயிலாக லட்சக் கணக்கான விவசாயத் தொழிலாளர்களுக்குக் குடியிருப்பு மனை உரிமையாக்கப்பட்ட சாதனை. பேருந்துகளைத் தேசீயமாக்கும் கொள்கையை நடை முறைப்படுத்தியது; மின்சார உற்பத்தியைப் பெருக்கவும், பாசனத்திற்கான குழாய்களுக்கு மின் இணைப்பை இலட்சக் கணக்கில் வழங்கவும் எடுத்த முயற்சி, தொழில்வளம் சிறக்க ஏற்படுத்திய வாய்ப்புக் கூறுகள். தொழுநோய் இரவலர், ஊனமுற்றோர், கண்ணொளி யிழந்தோர், கைரிக்ஷா இழுத்தோர், ஆதரவற்ற விதவை கள், அனாதைச் சிறார்கள்-அனைவர்க்கும் திட்டங்கள் பல தீட்டி,பரந்த அளவில் நன்மைகள் பெருக்கிய பாங்கு. புதிய கல்லூரிகள், புதிய மருத்துவமனைகள் கிராம பயனடையும் விதத்தில் நூற்றுக்கணக்கில் மக்கள் அமைத்த அருமையான தொண்டு.