உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பது பாராட்டத்தக்கது” என திரு. ஜெயப்பிரகாஷ் கூறியது மட்டுமல்ல, அதுபற்றி என்னுடன் விவாதிக்கவும் செய்தார். இந்திராவுக்கு ஜெயப்பிரகாஷைப் பிடிக்கவில்லை. லஞ்ச ஊழல்களைக் களைய சமுதாய அடிப்படையிலும் தலை கீழ் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று ஜே. பி. சொன்னதை, இந்திரா ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. எனவே ஜெயப்பிரகாஷுடன், தி. மு. க. பெரும் இந்திரா எரிச்சலுடன் பாலும் நோக்கினார். டெல்லி ஒத்துப்போவதை வட்டாரத்திலும், குறிப்பாக டெல்லி வட்டாரத்தை உசுப்பிவிடக் கூடிய ஆற்றலும், சூது மனமும் கொண்ட தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில உயர் பிரிவினரிடமும் தி. மு. க. அரசு மீது வெஞ்சினம் ஏற்படப் பிறிதொரு நிகழ்ச்சியும் காரணமாயிற்று. சுயமரியாதை இயக்க நிறுவனரும், திராவிடர் கழகத் தலைவருமான பெரியார் மறைந்தார். ஆட்சி மன்றப் பொறுப்புக்கள் எதிலும் இல்லாத பெரியாரின் சவ அடக்கத்தை, அரசுமரியாதையுடன் நடத்த வேண்டுமென்று கழக ஆட்சி தீர்மானித்தது. அதற்கு எதிராக முணுமுணுப்புக்கள், அதிகார வர்க்கத்து மறுப்புக்கள் அனைத்தும் கிளம்பின. அனைத்தையும் பொருட்படுத்தாமல் பெரியாரின் இறுதி யாத்திரையும் அடக்கமும் அரசு மரியாதைகளுடன் நடைபெற்றன. டெல்லியிலும், டெல்லியைத் தூண்டிவிடுவோர் மத்தியிலும் கழக அரசின் மீது காழ்ப்பு, எல்லை கடந்தது. மூதறிஞர் ராஜாஜி மறைந்தவுடன் அவர் நினைவாகக் கிண்டியில் கட்டப்பட்ட ராஜாஜி நினைவாலயத்தைத் திறந்துவைக்க ஜே.பி. அழைக்கப்பட்டிருந்தார்.