உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

என்ற பெயரால் தொகைகள் தருவதற்குக் கழக அரசு ஏற்பாடு செய்து, தொழிலாளர்களின் தொல்லையை நீக்கியது. அவசர நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, வேண்டு மென்றே அவதூறு செய்திகளை வெளியிட்ட சில இந்திரா ஆதரவுப் பத்திரிகைகளின் ஒருநாள் பிரதிகள் காவல் துறையினரால் பறிக்கப்பட்டதைத் தவிர, நெருக்கடி காலத்திலும் பத்திரிகைகளை அறவே முடக்கி விடாமல் கழக அரசு ஓரளவுக்குப்பாதுகாப்பாக இருந்தது. பொதுக் கூட்டங்கள் நடத்த எவ்விதத் தடையையும் கழக அரசு விதிக்கவில்லை. இந்தியாவில் அவசரச் சட்ட பிரகடனம் பற்றிக் கேள்வியுற்ற ஒரு வெளிநாட்டுக்காரர், அதன் விளைவு களைப் பற்றித் தெரிந்துகொள்ள இந்தியாவுக்குப் புறப் பட்டு, நேராக சென்னையில் வந்து விமானத்தில் இறங்கித் தமிழ்நாட்டைச் சுற்றிப் பார்த்தால், அந்த வெளி நாட்டுக் காரரால் எந்த வேறுபாட்டையும் உணர்ந்து கொள்ள முடியாது. கழக அரசு, அவசர கால அச்சுறுத்தல்கள் மக்கள் வாழ்வைப் பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொண்டதுதான் அதற்கு முக்கிய காரணம். அதனால்தான் அவசர நிலையைக் கண்டித்துக் கழக அரசு பதவி விலகக்கூடாது என்று வெளியில் இருந்த பெருந்தலைவர்கள் எல்லாம் வலியுறுத்திக் கொண்டே யிருந்தார்கள். கழகம் நடத்திய பாசிச எதிர்ப்பு மாநாடு சென்னையில் தி. மு. க. சார்பில் நடைபெற்ற பாசி எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்ட நம்பூதிரிபாட், பின்வருமாறு கூறினார்: ஈ. எம். எஸ்