________________
43 நெருக்கடி நிலையை எதிர்த்த எல்லா இயக்கத்தினரும் நாடு முழுதும் பரப்பினர். வேதனை தாங்காமல் காமராசர் மறைவு இதற்கிடையே 1975 அக்டோபர் இரண்டாம் நாள் காந்தி பிறந்த நாளன்று அரசியல் தலைவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர் பார்த்திருந்த பெருந்தலைவர் காமராசர், அப்படி யாரும் விடுதலை செய்யப்படாதது மட்டுமல்ல, பழம்பெரும் தேசத்தியாகி ஆச்சார்ய கிருபளானி அவர்கள் "காந்தி ஜெயந்தி" அன்று கைது செய்யப்பட்டார்—என்பதையும் கேள்வி யுற்று வேதனை தாங்க முடியாமல் அவர் வீட்டில் (சென்னை யில்) மாரடைப்பால் மாண்டார். இராஜாஜி மறைந்தபோதுகூட வராத இந்திரா காந்தி காமராசர் மறைந்த செய்தி கேட்டுத் தமிழகம் புறப் பட்டார். அதற்கு முன்பே, காமராசருடைய உடல் ராஜாஜி மண்டபத்தில் அரசாங்க மரியாதையுடன் பார்வைக்கு வைக்கப்பட்டு, அரசு மரியாதைகளுடன் அடக்கம் செய்வது என்று கழக அரசு ஏற்பாடுகளைச் செய்து முடித்து விட்டது. காமராசரின் முகதரிசனம் காண்பதற்காக இந்திரா வந்ததாக யாரும் நினைக்கவில்லை. அவருடைய கரிசனமே- காமராசருக்குப் பிறகு அவருடைய கட்சியினரைத் தன் பக்கம் இழுத்துக் கொள்ள வேண்டுமென்பதில்தான் இருந்தது. ஓர் காமராசரை இந்திராகாந்தி உண்மையாகவே தனிப் பட்ட முறையிலேகூட மதிக்கவில்லையென்பதற்கு உதாரணத்தைக் கூறமுடியும்.