உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காலத்தின் கோலம்! 51 சனவரி 30 மாலை, நான் காந்தியடிகள் விழாவில் கலந்துகொண்டு பேசினேன், கவர்னர் முன்னிலையில்! 'காந்தியடிகள், அடிமைத் தளையிலிருந்து இந்திய மக்களை விடுவித்தார். ஆனால் இப்போது காந்தியடிகளின் கருத்துக்களை ஏடுகளில் வெளியிடவே தடை! எனவே நாம் காந்தியடிகளை இந்தத் தடையிலிருந்து விடுவிக்க வேண்டி யவர்களாக இருக்கிறோம்.' -என்று கருத்துத் தெரிவித்தேன். மேடையில் வீற்றி ருந்த முன்னாள் அமைச்சர் ஆர். வெங்கட்டராமன் நான் பேசி முடித்ததும் நான் கூறிய இந்தக் கருத்தினை சுட்டிக் காட்டிப் பாராட்டினார். அவர் நெருக்கடி நிலையை எதிர்த்து “சுயராஜ்யா” ஏட்டில் எழுதியவர். விழா முடிந்ததும், அருகே வேலை நடைபெறும் காம ராசர் நினைவகம் சென்று முன்பகுதியில் பொருத்தப்படும் “சர்க்கா” (இராட்டை) எந்த அமைப்பில் வைக்கப்பட வேண்டுமென்பதை, அமைச்சர் ப. உ. சண்முகத்திடம் விவாதித்துவிட்டு வீடு திரும்பினேன். தமிழகத்தின் பல பகுதிகளில் இராணுவம் இரகசிய மாகக் கொண்டுவந்து ஆங்காங்கு குவிக்கப்படுவதாகச் செய்திகள் வந்தன. போலீஸ் ஐ. ஜி. யை அழைத்து அது பற்றிக் கேட்டேன். தங்களுக்குத் தகவல் இல்லை என்றுகூறி னார். ஒருவேளை திராவிடர் கழகத்தைத் தடை செய்வதற் கான முன்னேற்பாடாக இருக்குமென்றனர் அதிகாரிகள். கடைசி நேரத்திலும் கவர்னரின் பாராட்டுரை! மறுநாள் சனவரி 31. காலையில் கிண்டி காந்தி மண்ட பத்தில் தடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் கே. கே. ஷா. 9.-4