பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/203

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 கொள்கை வேற்றுமைகள் எப்படியிருந்த போதிலும், குருஷ்சேவ் சீனர்களைச் ‘சீனச் சகோதரர்கள்’ என்றும், இந்தியர்களை ‘இந்திய நண்பர்கள்’ என்றுமே குறிப்பிட்டு வந்தார். ‘பிராவ்தா’ முதலிய ரஷ்யப் பத்திரிகைகளும் அப்படியே தவறாமல் குறிப்பிட்டன. எனினும் சகோதரர்களுக்குள்ளும் பகைமை ஏற்படுவதைச் சரித்திரத்தில் காண்கிறாேம். ரஷ்யாவிலும் தேசியப்பற்று உச்ச நிலையில் இருந்து வருகின்றது; சீனாவிலும் தேசியத்தைக் கொண்டே கோடிக்கணக்கான மக்களை ஐக்கியப்படுத்தி முன்னே செலுத்த முடிகின்றது. முன்னாள் பிரெஞ்சுப் பிரதம மந்திரி ஒருவர் கூறியது போல், ரஷ்யா என்றால் ‘கம்யூனிஸம்+ரஷ்ய தேசியம்’ சீனா என்ருல் ‘கம்யூனிஸம் + சீனத் தேசியம்’. இதுதான் உண்மையான நிலைமை. கம்யூனிஸத்தால் ஒற்றுமை ஏற்பட்டது . ஆனால் இருவகைத் தேசியங்களும் முரண்பாடுள்ளவை.

போட்டிகள்

சீனாவும் ரஷ்யாவும் அண்டை நாடுகள். இரண்டுக்கும் பொதுவான நீண்ட எல்லையுள்ளது. ஒன்றின் எல்லைப்புற ராஜ்யங்களில் மற்றதன் கண்பார்வை இருந்து கொண்டேயிருக்கின்றது. இது இன்று நேற்றுத் தோன்றிய விஷயமன்று. பண்டைக்காலம் முதலே இந்த முரண்பாடு நிலைத்திருக்கின்றது.

இந்த நிலையில் ரஷ்யாவைக் காட்டிலும் சீனா அதிக வல்லமையும் செல்வாக்கும் பெற்று, ஆசியா மட்டுமின்றி, ஐரோப்பாவிலும் தலையிடுகையில், இதுவரை ஐரோப்பிய விவகாரங்களில் ஆதிக்கியம் செலுத்தி வந்த ரஷ்யா பின்னடைந்து ஒதுங்கிவிட முடியுமா? அல்லது சீனா தனக்கு அருகிலுள்ள தென்

இ. சீ. பா.—13
193