பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/300

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அமைத்துள்ளது. நெய்வேலி சென்னையிலிருந்து 150 மைல் தொலைவிலுள்ளது. நிலக்கரி தோண்டுவதற்கு மட்டும் முதலில் ரூ. 17 கோடிக்குத் திட்டம் தயா ரித்து வேலைகள் வேகமாக நடந்து முடிந்தன. 1957-ஆம் ஆண்டு மே மாதம் நிலக்கரி எடுக்கும் வேலை துவங்கியது. இதற்காகச் சுமார் 24 கோடி கன அடி மண்ணைத் தோண்டி யெடுத்து வேறிடத்தில் 100 அடி உயரமுள்ள மலேயாகக் குவிக்கப்பட்டு வருகின்றது. முதற்படியாக 53 சதுர மைல் பரப்புள்ள இடத்தில் தான் மண் வெட்டப்படுகிறது. நிலக்கரிப் பாளங்களுக்கு அடியில் ஏராளமான தண்ணிர் தேங்கி அடங்கிக் கிடக்கின்றது. தண்ணி ருக்கு மேலே நிலக்கரியும், அதற்கு மேலே சுமார் 180 அடிக்குக் கூடுதலாக மண்ணும் இருந்ததால் அது உள்ளே அழுத்தப் பட்டிருந்தது. மண்ணை நீக்கி நிலக் கரி தோண்டப்படுகையில் அத் தண்ணிர் விடுதலை பெற்று மேலே பீறிட்டுக் கொண்டு பாய்ந்து வருகின் றது. நிலக்கரி எடுக்கு மிடங்களில் தண்ணிர் பாய்ந்து சேதம் விளக்காம லிருப்பதற்காகத் தக்க இடங்களில் 48 பெரிய கிணறுகள் அமைத்துக் குழாய்கள் மூலம் தண்ணிரை வெளியேற்ற ஏற்பாடு நடந்திருக்கிறது. ஒரு நிமிடத்திற்கு 48,000 காலன் தண்ணிர் வீதம் வெளியேற்றப்பட வேண்டும். நெய்வேலியில் நடந்து வரும் வேலைகளைப் பலரும் புகழ்ந்துள்ளனர். காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வேலைகள் நடக்கின்றன. மண் தோண்டு வதற்கும் அப்புறப்படுத்துவதற்குமாகப் புல்டோஸர்' முதல் பல கருவிகள் உபயோகமாகின்றன. ஒவ்வொரு 'நாள் இரவிலும் வேலே முடிந்தபிறகு இயந்திரங்களை யும், கருவிகளையும் கழுவி, எண்ணெய் தடவிவைக்கத் தவறுவதே இல்லை. இதே போல அவைகளைப் 9 () ()