பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/303

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குறைந்திருக்கின்றது. உலகிலே ஸிந்திரி இரசாயன உரமே மிகவும் மலிவானது. 1963 தொடக்கத்திலிருந்து இத் தொழிற்சாலை யின் பழைய பகுதியில் நாளொன்றுக்கு நவச்சாரம் 324, 6 டன்னும், நவச்சார (அமோனியம்) ஸல்பேட் 976 டன்னும் உற்பத்தியாகி வருகின்றன. புதிதாக அமைந்த பகுதியில் சென்ற ஜனவரியில் யூரியா உரம் 1,867 டன் தயாராகியுள்ளது. மொத்தத்தில் இது வரை ஸிந்திரியில் ரூ. 100 கோடி பெறுமதிப்புள்ள 35 லட்சம் டன் உரங்கள் உற்பத்தியாகி யிருக்கின்றன. நங்கல், ரூர்கேலா, நெய்வேலி, ட்ரோம்பே, காம்ரூப், கோரக்பூர் ஆகிய இடங்களிலும் 3, 20,000 டன் இரசா யன உர உற்பத்திக்கு ஏற்பாடாகியிருப்பது முடிந்த வுடன் உரத்திற்கான பஞ்சம் குறையக் கூடும். கிழக்குப் பஞ்சாபிலுள்ள நங்கலில் தொழிற்சாலை யின் உத்தேசத் செலவு ரூ. 25 கோடி. 1961-இல் பிப்ரவரி மாதம் முதல் உர உற்பத்தி நடந்து வருகின் றது. இது நாள்தோறும் உற்பத்தி செய்யக்கூடிய கால்வியம் அமோனியம் நைட்ரேட் 1, 17 6 டன்னில் ே பகுதி இப்பொழுது தயாராகின்றது. பாக்ரா அணையி லிருந்து கூடுதலான மின்சார சக்தி கிடைத்த பின்பு உற்பத்தி அதிகரிக்கும். * - - ரூர்கேலாவில் இ ர சா ய ன உரங்களுக்கான தொழிற்சாலையை முதன் முறையாக இந்திய நிபுணர் களே அமைத்து அநேகமாக முடித்துவிட்டனர். நெய்வேலி உரத்தொழிற்சாலை அமைப்பு பல காரணங்களால் சுணக்கமடைந்திருக்கின்றது. அங்கு அடுத்த ஆண்டு மத்தியில்தான் உற்பத் தி தொடங்கு மென்று எதிர்பார்க்கப்படுகின்றது. அங்கு பழுப்பு நிலக்கரியிலிருந்து யூரியா உப்பு தயாரிக்கப்படும். இத ல்ை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி குறைந்து, 2 9 5