பக்கம்:இந்தியா எங்கே.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

இன்ப :

இன்ப

மன்

இன்ப

மன்

இன்ப

நம் தாய்

பதவி, என்றுமே இனிப்பும் வனப்பும் வாய்ந்தது தான். அதை நமக்குப்பின் சந்ததியாரும் சுவைக்கப் பழகவேண்டும் என்றெண்ணியே இம்முடிவு செய்தேன். ஏன்? மைந்தன் ஞான தேவன் பட்டம் பெறுவதற்கேற்ற பக்குவம் அடையவில்லையென்று எண்ணுகிறாயா?

பட்டத்துக்கு என்ன அவசரம், முதலில் ஞான தேவனுக்குத் திருமணம் நடைபெறட்டுமே. மணப்பெண்ணை இன்னும் அவன் தேர்ந்தெடுக்க வில்லையே.

ஒகோ பெண்ணை அவன்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமா?

ஏற்ற பெண்ணை நீ தான் தேடிச் சொல்லேன்.

நான் தேடவேண்டுமா? எங்கே சென்று? விமானத்திலேறி, விண்ணிலே பறந்து வானுலகத் திற்குச் செல்ல வேண்டுமா பெண் தேட?

என்னப்பா! திடீரென்று உன்கோபம் பூமி யிலிருந்து ஆகாயத்திற்குத் தாண்டி விட்டதே!

நான் தாண்டவில்லை. உங்கள் நினைவுதான் கனவு உலகத்திலே தாண்டவமாடுகின்றது. மதுவோடு மறதியையும் சேர்த்துக் குடிப்பதன் பலனா இது? முன் கடந்த நாட்களைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.

நீ தான் தயவுசெய்து நினைவுபடுத்தி விடேன்.

உமது மைந்தன் என நீர் சொல்லும் ஞான தேவன், என்மகள் இன்பக்கொடியைத் தான் மணந்து ராணியாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற நமது அந்தரங்க நிபந்தனையை அன்றே மறந்து விட்டீர்களா? இன்று நினைவூட்டி விட்டேன். இனியாவது நினைவிருக்கட்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/134&oldid=537697" இலிருந்து மீள்விக்கப்பட்டது