பக்கம்:இந்தியா எங்கே.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 95

வேல் : இல்லை நான் அழவில்லை. இல்லை. சொன்ன படி கேட்டால், அழவில்லை. எங்கே உங்கள் வேஷத்தைப் பார்க்கலாம்.

வான் : வா பிறகுவந்து இந்த மண்ணாங்கட்டிகளைப்

பொறுக்கிக் கொள்ளலாம்.

இடம் : முன்னிடமே

காலம் : முற்காலந்தான் (தாடி கட்டியதாடை - முதியோனைப் போன்ற முகவேடம் கந்தல் மேலாடை - கையில் திருவோடு - கரத்திலே ஊன்றுகோல் குருடனைப் போல் நடிப்பு - இத்துடன் யாசகன் போன்ற மெய்ப்பாட்டுடன் வறுமையைப்பற்றிப் பாடிவருகிறான் வான் அழகன்) -

வான் : எப்படி வேஷம்?

வேல் : சபாஷ்! அசல் பிச்சைக்காரரெல்லாம்கூட உங்களிடம் நடிப்பைப் பிச்சை வாங்க வேண்டும் போலிருக்கிறது. எங்கே! எப்படி நடந்து எந்த மாதிரி பிச்சை கேட்பீர்கள்? எங்கே.

வான் : அம்மா! கண் தெரியாதவனம்மா.

வேல் : ஐயோ பாவம். வா அப்பா. நான் வழிகாட்டு

கிறேன். எங்கே போகவேண்டும்?

வான் : இனிமேல் எங்கம்மா போவது? இருட்டாகி

விட்டதே. -

வேல் : உன் குருட்டு விழிக்கு இருட்டை மட்டுந்தான்

அடையாளந் தெரியுமா? -

வான் : பசி பொறுக்காமல்தானம்மா புறப்பட்டேன்.

வேல் : நிறைய உணவு உண்ணலாம். அழாதே அப்பா..!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/97&oldid=537659" இலிருந்து மீள்விக்கப்பட்டது