உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 20 நான் அவருடைய லட்சியங்களுக்குப் படிந்தேன்.- கொள்கைகளுக்கு படிந்தேன். அவருடைய எண்ணங் களுக்கு படிந்தேன். அப்படி படிந்த காரணத்தால்தான் எனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ, இன்றைக்கு உங்கள் முன்னால்- உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவனாக நிற்கிறேன்; சாதாரண-சாமான்ய, எந்தவித மான பெருமைக்கும் லாயக்கில்லாத ஒரு குடும்பத்திலே பிறந்தவனாகிய நான். என்னுடைய பரம்பரை பணக்காரர்களுடைய பரம் பரையல்ல! பட்டதாரிகளுடைய பரம்பரை அல்ல! மிட்டாமிராசுகளோ; குட்டி குபேரர்களோ அல்ல என் குடும்பத்தார். மிகச் சாதாரணமான குடும்பம். ஊரிலே மண் ணெண்ணெய் விளக்கு எரிகிற நேரத்திலே கூட, சாதா ரண எண்ணெய் விளக்கு வைத்துக் கொண்டு தஞ்சை மாவட்டத்திலே, எங்கோ ஒரு சின்னஞ்சிறிய திருக்குவளை கிராமத்திலே "முத்துவேலருக்கும் அஞ்சுகத்தம்மையா ருக்கும்" பிறந்த இந்த கருணாநிதி, இன்றைக்கு உங்களால் கருணாநிதி போற்றப்படு கிறான் என்றால், இது பெரியார் இட்ட பிச்சை; அண்ணா தந்த செல்வம் இது என்றுதான் நான் கருதிக் கொள் கிறேன். நேற்றும், இன்றும் எனது தம்பிமார்களும், எனக்கு அண்ணனைப் போல் இருக்கின்ற பேராசிரியர் அவர்களும் வழங்கிய வாழ்த்துக்களும், புகழாரங்களும். போற்றல் மொழிகளும் அத்தனையும் எனக்குச் சொந்தமல்ல; காஞ்சியிலே பிறந்த கண்ணான அண்ணா! உன் காலடி களுக்குத்தான் சொந்தம், எனக்குச் சொந்தமல்ல! நான் அவைகளுக்கு உரிமை கொண்டாட முடியாது.