உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 தூண்டுதலோடு, அண்ணா அவர்களுடைய ஒத்துழைப் போடு, உறுதுணையோடு நடைபெற்றது. பொன்னப்பா அவர்களும், முல்லை முத்தையா அவர் களும், அண்ணா அவர்களும் கழக மாமணிகளும் முன் நின்று நடத்தினார்கள். அன்றைக்கு அண்ணா அவர்களை நான் காஞ்சிக்கு வந்தவுடன், அவர்களுடைய இல்லத்திற்குச் சென்று சந்தித்தேன். வழக்கம் போல் காலையிலே மணி ஒன்பது. உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவருடைய காலடியிலே அமர்ந்திருந்தோம் நானும் என்னுடன் வந்த நண்பர்களும். நீண்ட நேரத்திற்குப் பிறகு எழுந்தார்கள். அண்ணாவை அந்த இல்லத்திலே அன்றைக்குச் சந்தித் தேன், 1945-ல்! அதற்குப் பிறகு 69 வரையில், காஞ்சி நகரத்திற்கு எத்தனை முறையோ பயணம் செய்திருப்போம். எங்களை இல்லத்திலே இருக்கச் செய்து விட்டு, காலை உணவு அருந்துங்கள் என்று கூறி விட்டு, நான் அலுவலகம் சென்று வருகிறேன், என்று அண்ணா புறப்பட்டார். எதிலே புறப்பட்டார்; ஒரு சைக்கிளில் புறப்பட்டார்! சைக்கிளில் சென்ற அந்த அண்ணனையே அன்றைக்குக் கண்டவர்கள் நாங்கள். குதிரை வண்டியிலே சென்று இருக்கிறார்! நல்ல நீல வண்ணத்தில் ஒரு கைலி கட்டியிருப்பார்! ஒரு வெள்ளை பனியன் போட்டிருப்பார்! அண்ணாவினுடைய வெளித் தோற்றம் இந்த காஞ்சி யிலே இன்றைக்கும் இருக்கின்ற பெரியவர்களுக் கெல்லாம் நன்றாகத் தெரியும்.