உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

31 தோடு நாம் நம்முடைய நினைவலைகளை உலவ விட வேண்டுமேயல்லாமல் அதிகாரிகள் தலை குனிவார்கள், போலீஸ்காரர்கள் சலாம் போடுவார்கள், போலீஸ் வேன் முன்னும் பின்னும் போகும் என்று கருதுபவர்கள் அல்ல நாம். போலீஸ் வேன்கள் நமக்கு ஒன்றும் புதிய அனு பவம் அல்ல. போலீஸ் வேன்கள் நான் முதலமைச் சராக இருந்த போது மாத்திரமல்ல, அதற்கு முன்பும் நான் பலமுறை கைது செய்யப்பட்ட போது முன்னும் பின்னும் போனது உண்டு. ஆட்சி என்கிற வாய்ப்பு-பொதுமக்களுக்கு பணி யாற்றுகின்ற வாய்ப்பு நமக்கு தரப்படுமேயானால் அதை இந்த ஏழு ஆண்டு காலமாக வீழ்ந்துகிடக்கின்ற தமிழ்ச் சமுதாயத்தில் மீண்டும் ஒளி விளக்கு ஏற்றிவைக்க பயன்படுத்துகின்ற ஒரு வாய்ப்பாக தான் கருத வேண் டுமேயல்லாமல் தவறாக யாரும் எண்ணிடக் கூடாது. இதைத்தான் நான் மீண்டும் மீண்டும் நம்முடைய கழகத் தின் கண்மணிகளுக்கும், உடன் பிறப்புகளுக்கும் தெரி வித்துக் கொள்கிறேன். இன்றுள்ள புதிய சூழ்நிலைகளை பொதுச் செயலாளர் இறுதியாக தெரிவித்ததைப் போல நீங்கள் அனைத்து மக்களுக்கும் விளக்கிடவேண்டும். மாநாட்டிற்கு வந் தோம், எழுச்சி கண்டோம். மகிழ்ச்சி கொண்டோம் என்று கலைந்து சென்றால் பயனில்லை. அருமைத் தாய்மார் களும், சகோதரிகளும், பாட்டாளித் தோழர்களும், கழகத் தின் செயல்வீரர்களும், மகளிர் அணியினரும், இளைஞர் அணி தம்பிமார்களும் கிராமம் கிராமமாகச் சென்று நாட் டில் நடைபெறுகின்ற நிலைமைகளை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆர். 1972-ஆம் ஆண்டு, நம்முடைய கழகத்தை விட்டு தன்னை வெளியேற்றிக் கொண்டு