உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

33 ற அதற்கு எம்.ஜி.ஆர். சொல்லுகின்ற விளக்கம், "என் னோடு இருந்தவர்கள் என்னை விட்டுப் போகும் போது என் மீது லஞ்ச ஊழல் புகார்களை அள்ளி வீசுகிறார்கள். இது தெய்வத்துக்கே அடுக்காது. இது கோழைத்தன மான செயல், அண்ணாவின் பண்புக்கு எதிரானது. அண்ணாவின் கொள்கைகளைச் சொன்னவர்கள் இருக்கும் வரை இருந்து விட்டுப் போகும் போது லஞ்ச ஊழல் என்பது அண்ணாவின் முதுகில் குத்துவதாகும்" என்று சொல்கிறார். இதே காரியத்தை எம். ஜி. ஆர். செய்யவில்லையா? ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் மதுரையில் மாவட்ட மாநாடு நண்பர் முத்து நடத்துகிறார். அந்த மாநாட்டிலே எம். ஜி. ஆர். பொதுமக்களைப் பார்த்துக் 66 "கழக ஆட்சியை ஊழல் ஆட்சி என்று சொல்லுகிறார்கள். நீங்கள் நம்புகிறீர்களா?" என்று கேட்கிறார். பொது மக்கள் 'இல்லை! இல்லை!' என்கிறார்கள். "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு எனவே கழக ஆட்சி ஊழல் இல்லாத ஆட்சி. காங்கிரஸ்காரர்களே புரிந்து கொள்ளுங்கள் என்று கர்ஜித்தார். "" ஆனால் அக்டோபர் மாதம் கழகத்தில் இருந்து வெளி யேறினார். அப்போது லஞ்சம் ஊழல் என்ற புகார்களைச் சொன்னார். பட்டியல் போட்டு ஜனாதிபதியிடம் கொண்டு போய்க் கொடுத்தார். இன்றைக்கு அவரது கட்சியிலிருந்த எஸ். டி.சோம் சுந்தரம், எம். ஜி. ஆரைப் போல ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை. ஆதாரத்துடன் பேசுகிறார். என்ன பேசுகிறார்? 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரி கையில் அவரது பேட்டி வந்திருக்கிறது. அதிலே அவர், "விற்பனை வரியில் சில சலுகைகளை அளிக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். அதை அந்த துறையின் அமைச்சர் என்