உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

36 அந்தக் கமிஷனுடைய அறிக்கையில் நாலே பக்கத்தை மட்டும் நிதியமைச்சர் நாவலர் சட்டபேரவை யிலே படித்தார். இன்றுவரை அந்த அறிக்கைப் புத்தகம் உறுப்பினர்களுக்குத் தரப்படவில்லை. அந்த அறிக்கை வேண்டு மென்று கேட்டு நான் தலைமைச் செயலாளர் சொக்கலிங்கத்திற்கு கடிதம் எழுதி மூன்று மாத கால மாகிறது. மரியாதைக்காகக் கூட, இதுவரையில் தலைமைச் செயலாளர் பதில் எழுதவில்லை. அந்த அறிக்கையை எனக்குத் தர நீதி மன்றம் உத்தரவிட வேண்டும் என்று நான் வழக்குத் தொடுத் திருக்கிறேன். நாளை அந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. ஆக ராம பிரசாத்ராவ் கமிஷன் அறிக்கையை வாங்கு வதற்குக் கூட வழக்குப் போட வேண்டியிருக்கிறது. "என்னைப் பற்றி குற்றம் சொன்னால் அதை நீதி மன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்" என்று சொல்லுகிறார். 1981-ஆம் ஆண்டு சென்னையில் நான் ஒரு கூட்டத் தில் பேசும்போது- "முதலமைச்சர் பாட்டிலிங் யூனிட்-சாராய கலவை தொழிற்சாலையில் அடைக்கப்பட்ட புட்டிகளை விற்பனை செய்ய ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொது விற்பனை யாளர்களுக்குப் பிறகு சில்லரை விற்பனையாளர் இவ் வளவு ஏற்பாடுகளையும் செய்து ஒவ்வொரு கட்டத் திலும் கோடிக்கணக்கான ரூபாயை லஞ்சமாகப் பெறு கிற நிலை இன்றைக்கு நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. நான் பகிங்கரமாகக் குற்றஞ்சாட்டுகிறேன். முத லமைச்சர் அப்படிப்பட்ட காரியங்களில் லஞ்சம் வாங்கி யிருக்கிறார். மறுப்பதாக இருந்தால்-நான் சொல்வது