உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

38 புறம்பானது என்றும், களங்கம் ஏற்படுத்துவதற்காகவே பேசினார் என்றும் அதற்காக இந்திய குற்றவியல் பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு ஒன்று போட்டிருந்தனர். அந்த வழக்கை அவர்களாகவே வாபஸ் வாங்கிக் கொண்ட னர். ஆகவே நான் நீதிமன்றத்திற்கு வரத் தேவையில்லை, என்று கூறியிருந்தார்கள். நான் எம். ஜி. ஆரை கேட்கிறேன். உமக்கு வக்கிருந் தால், வகையிருந்தால், தெம்பு இருந்தால், திராணி இருந் தால் வீரம் இருந்தால் நீதிமன்றத்தில் என்னை சந்தித்து இருக்க வேண்டாமா? எவ்வளவு பயங்கரமான வழக்கு? எம்.ஜி.ஆர்.கோடி கோடியாய் கொள்ளை அடிக்கிறார். சாராய சாம்ராஜ்யத் தில் ஊழல் செய்கிறார் என்றும் பேசினேன். இன்றைக்கும் சொல்லுகிறேன். நான் அப்படி பேசினேன். அதை முரசொலியிலே முரசொலி மாறன் வெளியிட்டார். எங்கள் இரண்டு பேர் மீதும் வழக்கு மூன்றாண்டு காலம் நடை பெறுகிறது. திடீரென்று எம். ஜி. ஆருக்காக வாதாடிய அரசாங்க வழக்கறிஞர் "அந்த வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டு விட்டோம். எனவே உங்களது கட்சிக்காரர்கள் கருணா நிதியும், மாறனும் கோர்ட்டுக்கு வரத் தேவையில்லை.' என்று சொல்கிறார்கள் என்றால் இதைவிட இவர்களுடைய லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் வேறு ஒரு உதாரணம் தேவையா? இதற்கு எம்.ஜி.ஆர். தருகின்ற பதில் என்ன? எஸ். டி. எஸ். எடுத்து வைத்திருக்கிற குற்றச்சாட்டு களுக்கு எம்.ஜி.ஆர்.தருகிற பதில் என்ன? தமிழகத்திலே ஏழாண்டு காலமாக ஒரு ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஊழல் சாம்ராஜ் யத்தின் துணையை வைத்துக்கொண்டு எதை வேண்டு