உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

40 பாம்பு கடித்தால் விஷம் ஏறாது என்று சொன்னால் அது எவ்வளவு முட்டாள்தனமோ - அல்லது மற்றவர் களை முட்டாள்களாக எண்ணிக் கொண்டிருக்கிறார் களோ! அதைப் போலத்தான் ஜனாதிபதி ஆட்சி முறை வந்தால் ஜனநாயகத்திற்கு கேடு வராது என்று எடுத்து வைக்கின்ற வாதம். உதாரணத்திற்கு ஒன்றைச் சால்கிறேன். இன்றைக்கு இலங்கையிலே ஜெயவர்த்தனே - அங்கிருந்த பாராளுமன்ற முறையை தகர்த்து விட்டு அதிபராக வந்த பிறகு அங்குசிறுபான்மையினராக இருக்கின்ற தமிழர் களின் கதிஎன்ன? எண்ணிப்பாருங்கள். என்ன ஆயிற்று? அவர் அதிபர். எதையும் எந்த நேரத்திலும் செய்யக் கூடிய ராணுவத்தைக் கையில் வைத்திருக்கக் கூடியவர் சிறுபான்மை மக்களுக்கு அங்கு பிரதிநிதித்துவம் இல்லை. எனவேதான் இலங்கையில் அதிபர் ஆட்சிமுறையால் அங்கு சிறுபான்மையாக இருக்கின்ற ஈழத் தமிழர்கள் நாள்தோறும் செத்து மடிகிறார்கள். தமிழச்சிகள் கற்பிழக் கிறார்கள். தமிழ் மழலைகள் பாறையில் மோதப்பட்டு மண்டை சிதறுண்டு இறக்கின்றன. இது இலங்கையில் நடைபெறுகின்ற கோரக்காட்சி. அதிபர் ஆட்சி முறையி னால் அங்கு எழுந்திருக்கின்ற கிளர்ச்சி எங்கே போய் நிற்கிறது? எங்களால் இந்த அதிபர் ஆட்சியின் கீழ், சிங்களவர்களின் பெரும்பான்மை ஆதிக்கத்தின் கீழ் இருக்க முடியாது. ஆகவே எங்களுக்கு தனித் தமிழ் நாடு வேண்டும் என்று இலங்கையில் தமிழன் கேட்கின் றான் - சிறுபான்மையாக ஆகி விட்ட காரணத்தால்!