பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

142_ இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது கேளாமல் அரிசன கோஷ்டியினரை அழைத்துக் கொண்டு மீனாட்சியம்மன் கோயிலுக்குள் பிரவேசித்தார், நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் அதிகாரிகள் சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஏ. வைத்திய நாதய்யரையும், அவருடன் சேர்ந்து தடையை மீறிக் கோயிலுக்குள் புகுந்த அரிசனங்கள் உள்ளிட்ட சத்தியாக்கிரகிகளையும் கைது செய்து சிறையிலடைத் தனர். இது நிகழ்ந்த ஒன்றிரு நாட்களுக்குள் மீனாட்சி யம்மன் ஆலயத்திற்குள் நுழைவதற்கு அரிசனங்களுக்கு இருந்த தடையை அகற்றும் வகையிலே அப்போது ஆளுநர் பொறுப்பிலிருந்த ஆங்கிலேயரின் துணை கொண்டு முதல்வர் ராஜாஜி அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தார். சட்ட விரோதம் பாரதப் பெருநாடு சுதந்திரம் பெற்றதும், தீண்டாமையை சட்ட விரோதமாக்கும் விதி இந்திய அரசியல் சட்டத்தில் சேர்க்கப் பட்டதல்லவா! அதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தது, 1938ல் ராஜாஜி ஆட்சி பிறப்பித்த ஆலயப் பிரவேச அவசரச் சட்டம், தேச விடுதலை இயக்கத்தை விடவும் வேகமாக வளர்ந்து வலுப்பெற்று வந்தது தீண்டாமை ஒழிப்பு இயக்கம். அதனை ஆன்மிக இயக்கமாகவே காந்திஜி கருதினார். இந்திய சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல் மனித சமுதாயம் முழுவதற்குமே பயன்படக் கூடிய பேரியக்கம் என்று தீண்டாமை ஒழிப்பு இயக்கத்திற்கு காந்தியடிகள் விளக்கம் தந்தார். தமிழ் நாட்டிலும் சரி; வடபுலத்திலும்