84
இந்திர மோஹனா
வாதமற்ற சிற்றரசர் வந்துதம் வரிப்பணம்
தீதிலாது நன்குடன் செலுத்திநிற்றல் உண்மையோ?' மாதமேவு மாரிமூன்று மாண்புறப் பொழிவதா? ஒதுகள்ள மின்றியே யுரைத்திடீர் அமைச்சரே. மந்திரி:
ராகம்: கானடா.
வேந்தனே நமதுநாட்டில் விருப்புடன் குடிகள்யாரும் சாந்தமாய் வாழுகின்றார் தக்கநம் மறையோரெல்லாம் பாந்தமாங் கோவிற்பூஜை பக்தியாய் நடத்துகின்றார் வேந்தனே. இன்னும்மற்ற விவரத்தை விளம்புகின்றேன். ராகம்: ஸஹானா.
அன்புறும் அரசராய வனைவரும் வரியைத்தாமே இன்பமாய்ச் செலுத்துகின்றார் எழிலுற மாரிமூன்றும் அன்புடன் பொழிந்துநாட்டில் அழகுடன்பயிர்செழித்து துன்பற யாவும்நாளும் துகளற விளங்குமன்றே. ஏந்தலே! யாவும் ஒருகுறைவுமின்றி நடக்கின்றது. குண:- மந்திரி! நாளைத்தினம் நம் மோஹனாவுக்கு விவாகமல்லவா? அதற்கு நமது ஆஸ்தான புரோஹி தருக்கும் அந்தணர்களுக்கும் சொல்லி விட்டீரா?
சொல்லியாய்விட்
மந்திரி:- ராஜன்! எல்லோருக்கும் டது. அவர்களும் அரண்மனைக்கு வந்து விட்டார்கன். இன்று சுமங்கலி பிரார்த்தனையும் வெகு சிறப்பாய் இராணியார் நடத்துகின்றார்கள்.
குண: - மந்திரி ! நாளை விவாகத்திற்காக நாட்டியப் பெண்களை வரவழைத்திருக்கிறோமே, அவர்களை இப்பொ