இந்திர மோஹனா
7
நேற்றுக்காலை என் மாற்றாந்தாயின் கொடிய வார்த்தை யைக்கேட்டு என் தந்தை என்னைச் சாளுவதேசத்தரசன் மகனை மணக்கும்படி கடிந்து பேசியதைக் குறித்து யான் துயருற்று இந்த நந்தவனத்துக்கு வந்தேன். அப்போது மன்மதனைப் பழிக்கும் அழகுடன்வந்த ஓர் உருவம் அலைகாற் றுப்போல் என் கவலையை யடித்துக்கொண்டு சென்றது. அவ்வாறே ஓர் பெருங்காற்று என்னை அவரிடம் தள்ளலா காதா ! அவ்வழகிய புருஷனைக்கண்டு களிக்கும்வரை, நான் அவர் பிரிவாற்றாமையை எப்படிப் பொறுப்பேன் ! ஒவ்வொரு நிமிஷமும் ஓர் யுகமாய்த் தோன்றுகிறது. இந்தப் பதினாறு வய துவரையிலும் ஒரு நாளாகிலும் நித்திரை செய்யாமலிருந்ததே யில்லை. நேற்றுமுதல் நித்திரை வராததைபற்றி நான் அதி படுகிறேன். இம்மரங்கள் இனிதாக அசைவதைப் பார்த்தால் தென்றல் வீசுகிறதுபோல் தோன்றுகிறது. ஆயின், என் சரீ ரம்மாத்திரம் ஏன் இவ்வளவுஎரியவேண்டும்? நேற்றுவரையில் வெகு குளிர்ச்சியாயிருந்த இந்த நந்தவனத்தில் ஏன் இன் றைக்கு இவ்வளவு தாபமா யிருக்கவேண்டும்? இதோ சந்திர னும் தன் குளிர்ந்த கிரணங்களுடன் உதயமாகி விட்டான். ஆனால், என்மனமோ குளிரவில்லை. ஆ! இது என்னமன்மதன் கூத்தோ! இத்தனை நாளாய் என் தந்தை சாணக்கியனை மணக் கும்படி வற்புறுத்தின போதெல்லாம் இம்மாதிரியான உணர் ச்சி எனக்கு ஏற்படவில்லை. விவாகம்என்னும் எண்ணமே என் மனத்திலுண்டாகாம லிருக்கும்போது, பாட்டைசாரியாய்ச் சென்ற பரம புருஷனைக்கண்ட மாத்திரத்தில் என் மனம் ஏன் இப்படிச் சஞ்சலமடையவேண்டும்? அந்தோ! என்தாய் உயி ரோடிருந்தால் என்மனத்திற்கு விரோதமாக விவாகஞ்செய்து கொள்ள இப்படி என்னை வற்புறுத்துவளா? என் மனச் சஞ் சலத்தை அரை நொடியில் ஒழித்து என் மனோபீஷ்டத்தை