உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திர மோகனா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




இந்திர மோஹனா

33


சற்றுப் பொறுத்துத் தெளியும். மேல் ஆக வேண்டிய காரியங்களைப்பற்றிக் கேட்பதற்குக்கூட நா எழவில்லை. எதற்கும் சற்றுப் பேசாமலிருங்கள். தானாகவே தெளிந்து எழுந் திருக்கட்டும்.

தேவகி:- ஹா மைந்தா ! இந்நேரம் எங்குச் சென்றாய்? என் கண்ணே! என்னருகில் உட்காரு.

நீலா:- ஹா ! என்ன துயரம்? மூர்ச்சித்துக் கிடக்கிற போதுகூட வாய் பிதற்றுகிறாரே! இனி இளவரசரை எங்குக்காணப்போகிறார்?

ஜய :- இனி, தெளிந்துவிடும். பேசாதே யிருங்கள். (மூவரும் ராணியார் பக்கலில் நிற்க, திரைவீழ்தல்).

மூன்றாவது களம் முற்றிற்று.

இரண்டாவது அங்கம். முதற் களம்.

இடம்:- மோஹனாவின் அந்தப்புரம்.

காலம்:காலை.

 (மோஹனா ஆசனத்தில் வீற்றிருந்தபடி பாடிக்கொண்டே பிரவேசம் .)
 (ஸரஸ ஸாமதான மென்றமெட்டு.)

ராகம்: காபி நாராயணி; தாளம்: ஆதி.

பல்லவி

.

ஸகல லோக நாதா! ஸௌமித்ரி ப்ராதா!

தசரத சுதா ! காத்தருள் பிதா!

அநுபல்லவி

.

 3

(ON)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/50&oldid=1686596" இலிருந்து மீள்விக்கப்பட்டது