56
இந்திரமோஹனா
சாமி ! தர்மதொரே ! நீங்க சேனாளேகி நல்லா இருக் கணம். நான் போய்வரேன் சாமி (ஆத்மகதமாய்), ஆ! நம்ப பாம்பு அதிஷ்டமே அதிஷ்டம். நல்ல மூட்டையாப்டுது. (நிஷ்க்ரமித்தல்).
ஜீவனன்:- ஆஹா ! அந்தப்பாம்பு என்னவழகு? பாடல் என்ன இனிமை ? பார்க்கவும் கேட்கவும் தெவிட்டாமலிருந் தன. ஐயோ! அவனுக்கு எவ்வளவு பசியோ, பாவம். அவன் ஒருவேளை உணவுக்காவது அம்மூட்டையிலுள்ளது போதுமா? சூரியன் கிழக்குத் திசையில் தன் கிரணங் களை விரித்துக்கொண்டு உதித்துவிட்டான்.
இனி நான இங்கு என்ன செய்வது? எப்படியாவது நம் ஊரை இன்றிர வுக்குள் அடைய முயலவேண்டும். ஆபத்பாந்தவா! இக் காட்டைவிட்டுச் செல்லும் என்னை என்னாட்டில் கொண்டு சேர்க்கவேணும்.
(பொன்னார் மேனியனே என்ற மெட்டு.)
அபயம் தந் தருள்வாய் ஆபத்தில்காத்திடுவாய் அனாதையாய்ச் செல்லும் என்னை ஆதரித்தருள்புரிவாய்.
இரண்டவது களம் முற்றிற்று.
ரண்டாவது அங்கம்.
(போகிறான்.)
மூன்றாவது களம்.
இடம் :- மோகனாவின் அந்தப்புரம். காலம்:- பிற்பகல் (மோஹனா சோபாவில் சாய்ந்தபடி பிரவேசம்.)
மோஹ.- ஆஹா ! ஈசனுடைய செயலை யாரால் அறி யக்கூடும் ? நான் முன்னிருந்த நிலைமையென்ன? இப்போ தி