உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணா

ஆற்றிய உரை

அன்புள்ள தோழர்களே,

"வட ஆற்காடு மாவட்டம், தமிழகத்திலே இந்த நாளில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையை முதல்முதல் தமிழகத்திற்கு அறிவிக்கின்ற முறையில் இன்றைய தினம் இந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்துகின்றது. வ. ஆ. மாவட்டத்திலேயுள்ள நண்பர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாநாட்டை இங்கே நடத்துகின்ற நேரத்தில் முதல் நாள் நடைபெறுகின்ற மாநாடு இந்தி எதிர்ப்பு மாநாடாக அமையவேண்டும் என்ற சூழ்நிலை நாட்டிலே இன்று உருவாகியிருக்கிறது.

“அந்தச் சூழ்நிலையை நல்லபடி உணர்ந்து நம்முடைய நண்பர்கள் முதல் நாள் மாநாட்டை ‘இந்தி எதிர்ப்பு மாநாடு’ என்று நடத்தி அதன் மூலமாக நீண்டநாளாக நம்மிடையே தொடர்பு கொண்டு இருந்தவரும், இடையிலே தனது துறையிலே பணியாற்றிக் கொண்டிருந்தவருமான எனது கெழுதகை நண்பர் – துறவிகளுடைய இலக்கணத்துக்கு ஒரு நடமாடும் சான்றாக இருந்து கொண்டிருப்பவர் – காவிகளெல்லாம் கறைபட்ட காலத்திலே, காவி உடையிலேயும் நல்ல உள்ளத்துடன் நடமாட முடியும் என்பதை நாட்டுக்கு எடுத்துக் காட்டியவர் – மறத்தமிழ்க்குடியிலே பிறந்தவர் – மறந்தும் தமிழுக்கு இழுக்குத் தேடுபவர்களை எந்தத் திக்கிலிருந்தாலும் அவர்களைச் சாடத்தக்க வகையிலே மன வலிமை படைத்தவர் – அருணகிரி அடிகள்