உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 2 —

காட்டிக் கொண்டிருந்த காங்கிரசுக்காரர்கள் நிறைந்திருந்த நிலையில், ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில்தானே இந்தியாவின் ஆட்சி மொழித் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டது!

அப்போதே ஆங்கிலம் மட்டுமே ஆட்சி மொழி என்று முடிவு செய்திருந்தால்... வெள்ளையர் மீது வெறுப்புணர்ச்சி மண்டிக் கிடந்த அந்த நிலையில் இந்திக்கு விட்டுக் கொடுத்த நமது பெருந்தன்மை இன்று பலவீனமாகக் கருதப்பட்டு விட்டது!

இயற்கையாகவே இரண்டாகப் பிரிந்து வட இந்தியா – தென்னிந்தியா என்று இணையவே முடியாத இரு துருவங்களை வெள்ளையர்கள் தங்கள் ஈட்டிமுனை வலிவோடும் – துப்பாக்கிகளின் துணையோடும் ஒரே இந்தியாவாக ஆள முயன்றார்கள் என்றால், காங்கிரசுக்காரர்கள் அதைக் கதர் நூலாலே கட்டி இணைத்துவிடப் பார்த்தார்கள்! பொருளாதார ஆதிக்கவெறி உள்ளூடாய் இழையும் அவர்களது போலித்தனமான 'தேசபக்தி'க்குக் கதர்கை கொடுக்கவில்லை. அதனாலே இந்தியாவே ‘ஏக இந்தியாவைக் கட்டிக் காப்பாற்ற அலைகிறார்கள்.'

1938-ல் இந்தி எதிர்ப்புப் போர் துவக்கப்பட்ட நாளில் பிறந்த தமிழனுக்கு இன்று 47 வயது – வேகமும் விவேகமும் இணைந்து வாழ்க்கைக்கு வழிகாட்டும் பருவம். இந்த அரை நூற்றாண்டுக்குப் பிறகும் நாம் இன்னும் அதைப்பற்றிப் பேசிக்கொண்டே இருக்கவேண்டி இருக்கிறதே! 1957-ல் இந்தி மீண்டும் நம்மீது திணிக்கப்பட்ட நேரத்தில் வட ஆர்க்காடு மாவட்டத்துத்