உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 6 —

அண்மையில், இந்தியாவை வெள்ளையர் கைப்பற்றிய நோக்கம் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் சிலர் ஒரு ஆய்வுக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

“வணிகநோக்கம் எதுவும் வெள்ளையருக்கு முதன்மையாக இல்லை. நாடு பிடிக்கும் எண்ணமே — அரசியல் ஆதிக்கத்தை வளர்க்கும் எண்ணமே முதன்மைக் குறிக்கோள் ஆகும். ஆனால் அதை மறைத்து தங்களுக்கு வணிக வரிவு நோக்கம் இருப்பது போலக் காட்ட கிழக்கு இந்தியக் கம்பெனியை ஒரு உருமாற்றாகப் (Camoflauge) பயன்படுத்தினார்கள். இதற்கான எழுத்து மூல ஆதாரங்கள் அண்மையில் கிடைத்தன.”

இதேபோலத்தான் வடநாட்டில் தயாரிக்கப்படும் எல்லா பொருள்களின் சந்தைக் காடாகத் தென்னாட்டை ஆக்குகின்ற ஒரு திட்டமிட்ட முயற்சியின் உருமறைப்பாக இந்தி மொழியைத் திணிக்க முயல்கிறார்கள். தென்னகத்தாரின் மொழி, இன, கலைவழித் தனித்தன்மைகளைத் தொலைத்துக்கட்டிவிட்டு இந்தி மொழிக்காரர்களில் அங்கீகரிக்கப்பட்ட அடிமைகளாக நம்மை ஆக்கிவிடத் துடிக்கிறார்கள்.

இத்தகைய கொடுமையான கால கட்டத்திலேதான், 1938-ல் இந்தி எதிர்ப்பு முதற்போரில் மூலமுழக்கமிட்ட முப்பெருந்துறவிகளில் ஒருவரான அருணகிரி அடிகளார் தலைமையிலே திருவண்ணாமலையில் 1957ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் முழங்கிய முழக்கத்தை இப்போது வெளியிட வேண்டிஇருக்கிறது.